பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

சுந்தர சண்முகனார்




“வாழி அவன்றன் வளநாடு
மகவாய் வளர்க்கும் தாயாகி
ஊழி உய்க்கும் பேருதவி
ஒழியாய் வாழி காவேரி
ஊழி உய்க்கும் பேருதவி
ஒழியா தொழுகல் உயிரோம்பும்
ஆழி யாள்வான் பகல்வெய்யோன்
அருளே வாழி காவேரி”
(27)

காவேரியைப் பெண்ணாக்கி அப்பெண்ணுக்கு ஒரு கணவனைப் படைத்து ஏதேதோ சொல்கிறாள். தனக்கு வேறு கணவன் ஒருவன் இருப்பது போல் தொடர்ந்து சொல்கிறாள்.

தலைவா முத்து பெறு என்கிறாய். முத்து வேண்டா. முத்தைக் கரையில் கொணர்ந்து பூக்களைத் தான் கொண்டு செல்லும் அலை கடலையுடைய புகாரே எம்மூர் (28)

தலைவா வளையல் கழன்று அலர் தூற்றுவது யாங்ஙனம் அறிவோம்? அன்னத்தையும் புன்னை மலரையும் மதியமும் விண்மீனும் என எண்ணி வண்டுகள் ஆம்பல் மலரை ஊதும் புகாரே எம்மூர். (29)

மாதர்க்குப் பிரிவு தருவாய் என்பதை யாங்கனம் அறிவோம்? சிற்றில் சிதைத்த கடலைச் சிறுமியர் தூர்க்கும் புகாரே எம்மூர். (30)

பிரிவைப் பொறுக்காத தலைவியின் மெலிவு, பெற்றோர்க்கு உண்மையை உணர்த்தி விடும்.

தோழியே! துணை புணரும் வண்டையும் என்னையும் நோக்கித் தன்னை மறந்தவன் வண்ணம் உணரேன். (31)

அடும்புகாள்! அன்னங்காள்! எம்மை நினையாது விட்டார் விட்டகல்க. நம்மை மறத்தாரை நாம் மறக்க மாட்டேம். (32)