பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

163


மாலைப் பொழுதே! நெய்தலே! என் கண்கள் போல் துயிலுவது இல்லையா? துயிலின், கனவில் அவர்வரின் கூறுவாய்! (33)

கடலே! அவர் சென்ற தேர்ச் சுவட்டை அழித்தாய். அவர் போலவே நீயும் என்னை மறந்தாயோ! (34)

தேர்ச் சுவட்டை அலைகள் அழிக்கின்றன. அன்னமே இது தகாது. (35)

அலையே! நீ தேர்ச் சுவட்டை அழித்தாய். நீ உறவு போல் இருந்து உறவு அல்லா யானாய். (36)

(தோழி சொல்வதுபோல்) தலைவா! மன்மதனது அம்புப் புண்ணைத்தலைவி மறைக்கிறாள். அன்னை அறியின் என் செய்கோ (37)

தலைவா! தலைவி உன்னால் பீர்க்கின் நிறம் கொள்கிறாள். அன்னை கடவுளைத் தொழுது காரணம் அறியின் என் செய்கோ (38)

தலைவா தலைவி தனியே துன்புறுகிறாள். அவளது உண்மையான நோயை அன்னை அறியின் என் செய்கோ (39)

(தலைவி சொல்வது போல்) தோழியே! ஞாயிறு போய் இருள் வந்தது. மயக்கும் இம் மாலை நம்மை மறந்தவர் இருக்கும் நாட்டிலும் உள்ளதோ (40)

இருளில் கண்கள் நீரைச் சொரிந்தனவே. மயக்கும் இம் மாலை அவர் நாட்டிலும் உளதோ (41)

பறவைகளின் ஒலிகள் அடங்கின. மயக்கும் மாலை அவர் இருக்கும் இடத்திலும் உளதோ (42)

ஒருவர் வந்து எம் விளையாட்டை மறப்பித்தார். அவர் நம் மனம்விட்டு நீங்கார். (43)