பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18. காப்பிய முன்னோட்டச் சுவை

காப்பிய ஆசிரியர்கள் தம் காப்பியத்தில் பல்வேறு சுவைகளை அமைப்பர். அவற்றுள் முன்னோட்டச் சுவை மிகவும் மேலானது. முன்னோட்டச் சுவை என்பது நான் (சு.ச.) வைத்த பெயராகும்.

காப்பியத்தில் பின்னால் நிகழப் போகும் செயலை முன்னாலேயே குறிப்பாக அறிவிப்பதை முன்னோட்டம் எனலாம். இந்த முன்னோட்டம், பின்னால் நிகழ இருப்பதற்கு எதிர்மாறானதாக முன்னால் சொல்லப்படும் போது சுவை மிகுகின்றது. இந்தச் சுவையை முன்னால் படிக்கும் போது அறிய இயலாது. இதற்கு எதிர்மாறான நிகழ்ச்சி பின்னால் நடந்திருப்பதைப் படிக்கும்போதுதான், இரண்டையும் ஒத்திட்டு நோக்கி மகிழ முடியும். எடுத்துக்காட்டாகக் கம்பராமாயணத்தில் அமைந்துள்ள சில முன்னோட்டங்களைக் காண்பாம். சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள சில முன்னோட்டங்களை அறிந்தும் புரிந்தும் சுவைப்பதற்காக 'இலக்கிய ஒப்புமை காண்டல்' என்னும் முறையில், கம்பராமாயண முன்னோட்டங்கள் சில ஈண்டு அறிவிக்கப்படும். கம்ப ராமாயணப் பாடல்களையெல்லாம் ஈண்டு எழுதின் விரியும் ஆதலின், அந்தப் பாடல்களில் உள்ள கருத்துகளை மட்டும் ஈண்டு எடுத்துக் கொள்ளலாம்.

மகன் இராமன்

மந்தரை சூழ்ச்சிப் படலம்:- உறங்கிக் கொண்டிருந்த கைகேயியைக் கூனி எழுப்பி, துன்பம் வந்த போதும் தூங்கிக் கொண்டிருக்கிறாயே என்று கூற, கைகேயி எழுந்து பின்