பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

சுந்தர சண்முகனார்



வருமாறு கூறுகிறாள்: என் பிள்ளைகள் நால்வரும் நல்லவர்கள். அவர்கள் இருக்கும் போது எனக்கு எந்தத் துன்பமும் வராது. அதிலும், இராமனைப் பிள்ளையாகப் பெற்ற எனக்குத் துன்பமே இல்லை - என்றாள். இதே இராமனைப் பின்னால் கைகேயி முடியைப் பறித்துக் காட்டிற்கு அனுப்பினாள்.

வாழிய

கைகேயிக்கு இராமனது முடி சூட்டைப் பற்றித் தெரிவிப் பதற்காக, யாழ் இசையினும் இனிமையாகப் பேசும் கைகேயி இருந்த இடத்திற்கு, வாழிய வாழிய என்று வாழ்த்திக் கொண்டு சிற்றரசர்கள் பின் தொடரச் சிங்கம் போன்ற தயர தன் வந்தான் - என்பது ஒரு பாடல் கருத்து.

யாழ் இசையினும் இனிமையாகப் பேசும் கைகேயி இன்னும் சிறிது நேரத்தில் தயர தனிடம் கடுமையாகப் பேசப் போகிறாள். சிங்கம் போன்ற தயரதன் நாடி ஒடுங்கி அவளிடம் கெஞ்சும் கோழையாகப் போகிறான். வாழிய - வாழிய என்று சிற்றரசர்களின் வாழ்த்தைப் பெற்ற மன்னன் இன்னும் சிறிது நேரத்தில் இறக்கப் போகிறான். இது ஒரு சுவையான முன்னோட்டம் அன்றோ!

கைகேயி வருந்தியவள் போல் கீழே வீழ்ந்தாள். தயர தன் அவளை நோக்கி, ஏன் வருந்துகிறாய்? யாராவது இகழ்ந்தார்களா? உன்னை இகழ்ந்தவர் இறப்பது உறுதி என்றான். பின்னர் கைகேயின் விடாப்பிடிச் செயலைக் கண்டு அவளைத் தயர தன் தான் இகழ்கிறான், இகழ்ந்தவர் இறப்பர் என்று சொன்னபடி கைகேயியை இகழ்ந்த அவனே இறந்து போகிறான்.

வளர்த்த தாய்

முனிவர் முதலிய பெரியோர்கள் பின் வருமாறு பேசிக்கொள்கின்றனர்: இராமன் பெற்ற தாயாகிய கோசலை