பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

சுந்தர சண்முகனார்


“தென்னன் வாழ்கவாழ்க என்று சென்றுபக் தடித்துமே

தேவரார மார்பன் வாழ்க என்றுபங் தடித்துமே”
(21)

என்பன மூன்று பாடல்களின் இறுதியிலும் வருவனவாகும்.

ஊசல் வரி

சோழனுக்கு அம்மானை வரி யாயிற்று; பாண்டியனுக்குக் கந்துகவரி யாயிற்று. மூன்றாவதாகச் சேரனுக்கு ஊசல் வரிப்பாட்டுகள் மூன்று பாடப்பட்டுள்ளன. ஊசல்-ஊஞ்சல். மூன்று பாடல்களின் இறுதி அடிகள் மட்டும் வருமாறு:

“கொடுவில் பொறி பாடி ஆடாமோ ஊசல்” (23)

“கடம்பெறிந்த வாயாடி ஆடாமோ ஊசல்” (24)

“விறல்வில் பொறிபாடி ஆடாமோ ஊசல்” (25)

சேரனின் வில் இலச்சினையும் கடம்பு எறிந்த வெற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன. வாழ்த்துக் காதையில் இறுதியாக மூவர்க்கும் ஒவ்வொன்று வீதம் வள்ளைப் பாட்டுகள் பாடப்பட்டுள்ளன. உரலில் ஒரு பொருளை இட்டு உலக்கையால் குற்றிக் கொண்டே ஒரு தலைவனைக் குறித்துப் பாடும் பாட்டு வள்ளைப் பாட்டாகும். அவை வருக!

வள்ளைப் பாட்டு

“தீங்கரும்பு கல்லுலக்கை யாகச் செழுமுத்தம்
பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார் மகளிர்
ஆழிக் கொடித் திண்தேர்ச் செம்பியன் வம்பலர்தார்ப்
பாழித் தடவரைத்தோள் பாடலே பாடல்
பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல்”
(26)

“பாடல்சால் முத்தம் பவழ உலக்கையான்

மாட மதுரை மகளிர் குறுவரே