பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேற்கூறிய பெருமைகளை உடைய பாண்டியன் ஊழிதோறு ஊழி வாழ்க - தென்னவன் வாழ்க - பூண்டோன் வாழ்க - மன்னவன் வாழ்க - தென்னனை வாழ்த்தி - என இந்தப் பகுதியில் ஐந்து இடங்களில் வாழ்த்துச்சொல் இடம் பெற்றுள்ளது. ஆனால் பாண்டியன் வாழ்ந்தானா? ஊழி தோறு ஊழி வாழ்க என்று வாழ்த்தினானே - ஒரு ' சில நாள் களிலே பாண்டியன் இறந்துவிட்டானே. ‘தீது தீர் சிறப்பின் தென்னன்’ என்றானே - ஆனால் தீது தீராயல் சில நாள் அளவிலேயே பெரிய கொலைக்குற்றத் தீது நேர்ந்து விட்டதே. எனவே, மாங்காட்டு மறையவன் வாயிலாக இளங்கோ பாண்டியனை வாழ்த்திய வாழ்த்துகள் காப்பிய முன்னோட்டச் சுவை பயப்பனவாகும்,

கோவலன்

கோவலன், இனிக்கொடிய வெயில் வருத்தும் பகலிலே பயணம் செய்யவேண்டா - நிலா வீசும் குளிர்ந்த இரவிலேயே பயணம் செய்யலாம் என்று கவுந்தியிடம் கூறும்போது, பாண்டியனைப் புகழ்கிறான். பாண்டியன் நாட்டில் கரடி பிற உயிர்கள் ஆக்கிய புற்றை அகழாது; புலி மானைக் கொல்லாது; பாம்பு, முதலை, இடிமுதலியவற்றால் எவருக்கும் துன்பம் நேராது - எனப் பாண்டிய நாடு எங்கும் புகழ் பரவியது எனவே இரவில் அச்ச மின்றிச் செல்லலாம் - என்றான்.

“செங்கோல் தென்னவர் காக்கும் நாடென
எங்கணும் போகிய இசையோ பெரிதே”
(13:9-10)

பாணர்கள்

செங்கோலை உடைய தென்னவர் என்பது குறிப்பிடத் தக்கது. கோவலன் கிட்டத்தட்ட மதுரையை நெருங்கிய நிலையில் வழியில் பாணர்களை நோக்கி மதுரை இன்னும் எவ்வளவு தொலைவில் உள்ளதென வினவினான். மதுரை