பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

181


அண்மையில் உள்ளது; தனியாகச் செல்லினும் வழியில் தடுப்பவரோ பறிப்பவரோ இல்லை - துணிவுடன் செல்லலாம் எனப் பாண்டியனது ஆட்சியைப் பாணர்கள் புகழ்ந்தனர்.

மீண்டும் கோவலன்

மதுரை நகரைச் சுற்றிப் பார்த்த கோவலன் கவுந்தியிடம் வந்து, மதுரையின் சிறப்பையும் பாண்டியனின் செங்கோன்மையையும் புகழ்ந்தான்:

"நிலங் தரு திருவின் நிழல்வாய் நேமி
கடம்பூண்டு உருட்டும் கெளரியர் பெருஞ்சீர்க்
கோலின் செம்மையும் குடையின் தண்மையும்
வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப்
பதியெழு வறியாப் பண்புமேம் பட்ட
மதுரை மூதூர் மாநகர் கண்டாங்கு
அறந்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பொழிலிடம் புகுந்து
தீதுதீர் மதுரையும் தென்னவன் கொற்றமும்

மாதவத் தாட்டிக்குக் கோவலன் கூறுழி" (15:1-10)

இது பாப்பகுதி. செங்கோலின் நேர்மையையும், குடையின் குளிர்ச்சியையும், வேலின் மறத்தையும், மதுரையின் தீது தீர் சிறப்பையும், தென்னவன் கொற்றத்தையும், இன்னும் சிறிதளவு காலத்தில் பாண்டியனது தவறால் இறக்கப் போகின்ற கோவலன் வாயாலேயே கூறவைத்துள்ளார் ஆசிரியர் இளங்கோ. கோவலன் இவ்வளவையும் குறுகிய நேரத்தில் கண்டு அறிந்திருக்க முடியுமா?

உலகில் பல இடங்களில் பசியாலும் பகையாலும் மக்கள் இடம் பெயர்கின்றனர். ஆனால், மதுரை மக்கள் மதுரையை விட்டு அகல வேண்டியது நேராமல் சிறப்பாகப் பாண்டியர் ஆள்கின்றனர் என்பதைப் 'பதியெழுவறியாப்