பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்போ சிலம்பு!

15


வானவர்கோன் ஆரம்வாங்கியதோள் பஞ்சவன்தன்
மீனக் கொடிபாடும் பாடலே பாடல்’
வேப்பந்தார் நெஞ்சுணக்கும் பாடலே பாடல்”
(27)
 
“சந்துஉரல் பெய்து தகைசால் அணிமுத்தம்,
வஞ்சி மகளிர் குறுவரே வாண்கோட்டால்
கடந்தடுதார்ச் சேரன் கடம்பெறிந்த வார்த்தை
படர்ந்த நிலம்போர்த்த பாடலே பாடல்

பணிந்தோடு உளங்கவரும் பாடலே பாடல்” (28)

இவை விளையாட்டுப் பாடல்களாகும். கரும்பாகிய உலக்கையாலும், பவழ உலக்கையாலும், யானைக் கோட்டு (தந்தத்து) உலக்கையாலும் குற்றுவார்களாம். உரல் சந்தன மரத்தால் ஆனதாம். சுவைத்தற்கு உரிய இலக்கியம் அல்லவா இது! மாணிக்கவாசகரின் திருவாசகத்திலும் ‘திருப்பொற்சுண்ணம்’ என்னும் பகுதி ஒன்றுள்ளது. அதிலுள்ள இருபது பாடல்களின் இறுதியிலும் “பொற் சுண்ணம் இடித்து நாமே” என்னும் தொடர் இருக்கும்.

இந்த வாழ்த்துக் காதையை நோக்குங்கால், மூவேந்தரின் சிறப்பைப் புகழ்ந்து கூறுவதற்கே இந்தக் காதையை இளங்கோவடிகள் பயன்படுத்திக் கொண்டாரோ என்று வியக்கத் தோன்றுகிறது.

ஆய்ச்சியர் குரவை

இமய மலையில் பாண்டியர்க்கு உரிய மீன் இலச்சினையும் சோழரின் புலி இலச்சினையும் சேரர்க்கு உரித்தான வில் இலச்சினையும் பொறிக்கப்பட்ட செய்தி ஆய்ச்சியர் குரவைப் பகுதியின் தொடக்கத்திலேயே அறிவிக்கப்பட்டுள்ளது.

“கயல் எழுதிய இமய நெற்றியின்

அயல் எழுதிய புலியும் வில்லும்...”
(1, 2)

என்பது பாடல் பகுதி.