பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

187


"ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு" (231)

"உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்று

ஈவார்மேல் நிற்கும் புகழ்" (232)

என்னும் குறட்பாக்கள் ஈண்டு எண்ணத்தக்கன.

கதைத் தலைவனாகிய கோவலன், தொடக்கத்தில் பெருமைக்கு உரிய செயல் ஒன்றும் செய்யாமையால், அவன் இறந்த பின், காப்பியத்தைப் படிப்பவர்க்கு அவன் மேல் இரக்கமோ - பரிவோ ஏற்படாது என்பதற்காக, அவன் மாபெருஞ் சிறப்புச் செயல்கள் (சாதனைகள்) புரிந்துள்ளான் என ஆசிரியர் இளங்கோ அடிகள், அடைக்கலக் காதையில், மாடலன் என்பவன் வாயிலாகக் கோவலனுடைய சிறப்புச் செயல்கள் பலவற்றை அறிவித்துள்ளார் என்று பலரும் கூறுவதுண்டு. இதில் ஒரளவு உண்மை உள்ள தெனினும், இந்தப் பகுதி தேவையில்லாமலேயே, கோவலனை உயர்த்திக் காட்டத் தொடக்கமாகிய மங்கல வாழ்த்துப் பாடலில் கூறப்பட்டுள்ள "மண் தேய்த்த புகழினான்" என்னும் இந்த ஒரு தொடரே போதுமே!

நாடு காண் காதை

கோவலனின் இரக்கம்:

கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் செல்லும் வழியில் கவுந்தியடிகள் என்னும் சமணப் பெண் துறவியாரின் துணையைப் பெற்று வழி கடந்தனர். மூவரும் சீரங்கத்துக்கு அப்பால் காவிரியின் தென்கரையை அடைந்து ஒரு சோலை யில் தங்கி இளைப்பாறிக் கொண்டிருந்தனர். அப்போது ஒழுக்கம் கெட்ட பரத்தை ஒருத்தியும் வந்த இழிமகன் ஒருவனும் இம் மூவரையும் கண்டனர். கவுந்தியை நோக்கி, கோவலனையும் கண்ணகியையும் சுட்டி, இவர்கள்