பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

சுந்தர சண்முகனார்


விட்டதற்கு நடுங்கினர்; கவுந்தியை நோக்கி, அவர்கள் அறியாமல் செய்த பிழையைப் பொறுத்து, அவர்களுக்குக் கெடுமொழி நீங்கும் காலம் கூற வேண்டினர். பின்னர்க் கவுந்தியடிகள், உறையூர் மதிலின் வெளிப்புறக் காட்டில் பன்னிரண்டு திங்கள் (ஓராண்டு) காலம் அலைந்து திரிந்து பின்னர்ப் பழைய உருவம் பெறுவாராக எனக் கெடுமொழியை விடுவித்தார். பாடல்:

“குறுநரி நெடுங்குரல் கூவிளி கேட்டு
நறுமலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி
நெறியின் நீங்கியோர் நீரல கூறினும்
அறியாமை என்று அறியல் வேண்டும்
செய்தவத்தீர் நும் திருமுன் பிழைத்தோர்க்கு
உய்திக் காலம் உரையீரோ என,
அறியாமையி னின்று இழிபிறப் புற்றோர்
உறையூர் நொச்சி ஒருபுடை ஒதுங்கிப்
பன்னிரு மதியம் படர்நோய் உழந்தபின்
முன்னை யுருவம் பெறுக ஈங்கு

இவரெனச் சாப விடை செய்து...”
(235.245)

என்பது பாடல் பகுதி. கூவிளி = ஊளை. நீரல = நீர்அல = ஒழுங்கற்றவை. உய்திக் காலம் = சாப விமோசன காலம். சாப விடை - விடை = விமோசனம். நொச்சி=மதில். ஒரு புடை-ஒரு பக்கக் காடு. திருமுன் = சந்நிதி.

கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் செலுத்தப்படும் இந்தக் காலத்தை விட்டுப் பண்டைக் காலத்திற்குச் செல்வோம். தலைநகருக்குக் காவலாக மதில் அரண், நீர் (அகழி) அரண், மணல் அரண், காட்டு அரண், மலை அரண் முதலியன இருக்கும். இங்கே, ‘உறையூர் நொச்சி ஒரு புடை’ என்பது எண்ணத் தக்கது. உறையூர் காவிரிக்கரை சார்ந்த சோழரின் தலைநகரம். அதைச் சுற்றி மதில் அரண் - அடுத்து நீரரண் - அடுத்து மரஞ்-