பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

சுந்தர சண்முகனார்


கட்டுரை காதை

மதுரையின் நகர்த் தெய்வமாகிய மதுராபதி கண்ணகிக்குக் கூறுவதாக உள்ளது கட்டுரை காதை, இதிலும் மூவேந்தரின் சிறப்புகள் மொழியப்பட்டுள்ளன.

சேரர்

பெருஞ் சோற்று உதியன் சேரலாதன் பாரதப் போரில் படை மறவர்க்கு உணவு அளித்த செய்தி, பல்யானைச் செல்கெழு குட்டுவன் மறையவனாம் பாலைக் கெளதமனார்க்குச் செய்த உதவி, நெடுஞ் சேரலாதன் கடம்பு எறிந்த வென்றி, இமய மலையில் வில் பொறித்த வெற்றி ஆகிய சேரர் புகழ் சிறப்பிக்கப் பெற்றுள்ளது. பாடல்:

“பெருஞ்சோறு பயந்த திருந்துவேல் தடக்கை
திருகிலை பெற்ற பெருநாள் இருக்கை”
(55, 56)

“குலவுவேல் சேரன் கொடைத் திறம் கேட்டு” (62)

“வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேல் சேரலன்”
(63, 64)

“கடல் கடம்பு எறிந்த காவலன் வாழி
விடர்ச்சிலை பொறித்த வேந்தன் வாழி
பூங்தண் பொருநைப் பொறையன் வாழி

மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்க”. (81 - 84)

என்பன பாடல் பகுதிகள். அடுத்துச் சோழர் பற்றியன:

சோழர்

புறாவுக்காக நிறைத் தட்டில் ஏறித் தசை அரிந்து தந்த சிபி, கன்றைக் கொன்ற தன் மகனைக் கொன்று ஆவுக்கு முறை வழங்கிய மனுநீதி சோழன் ஆகிய சோழரின் பெருமை குறிக்கப்பட்டுள்ளது. பாடல்: