பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்போ சிலம்பு!

17


“புறவு நிறை புக்கோன், கறவை முறை செய்தோன்

பூம்புனல் பழனப் புகார்நகர் வேந்தன்’ (58 - 59)

என்பது பாடல் பகுதி. அடுத்துப் பாண்டியர் பற்றியன:

பாண்டியர்

பாண்டியன் நெடுஞ்செழியனது ஆட்சியில், மறை ஒலி தவிர, ஆராய்ச்சி மணியின் ஒலி கேட்ட தில்லையாம்; அவன் செங்கேல் முறை யறிந்த கொற்றவனாம்; குடிபழி துற்றும் கொடியன் அல்லனாம்:

“மறைநா ஓசை அல்லது யாவதும்
மணிநா ஓசை கேட்டலும் இலனே

அடிதொழு திறைஞ்சா மன்ன நல்லது

குடிபழி தூற்றும் கோலனும் அல்லின்” (31-34)

என்பது பாடல் பகுதி.

கட்டுரை

கட்டுரை காதையின் இறுதியிலுள்ள ‘கட்டுரை’ என்னும் பகுதியில் பாண்டியனின் சிறப்பு பெரிதும் பேசப்பட்டுள்ளது. பாண்டியர்குலம் அறமும் மறமும் ஆற்றலும் உடையது. மதுரை மூதூர் பண்பு மேம்பட்டது. விழாக்களும், குடி வளமும், கூழ் (உணவு) வளமும், வையைப் பேராறு தரும் செழிப்பும், பொய்யாத வானம் பொழியும் நீர் வளமும், வரிக் கூத்தாட்டும், குரவைக் கூத்தாட்டும் மற்றும் பிற வளங்களும் உடையது. செங்கோல் தவறினமைக்காகத் தேவியுடன் அரசு கட்டில் துறந்து வீழ்ந்து இறந்து வளைந்த கோலை நிமிர்த்திய பாண்டியன் நெடுஞ்செழியனைப் பெற்றது. பாடல்:

“முடிகெழு வேந்தர் மூவ ருள்ளும்
படை விளங்கு தடக்கைப் பாண்டியர் குலத்தோர்

அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்