பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

சுந்தர சண்முகனார்


கற்பிக்கும் முறை

பாடம் கற்பிக்கும் ஆசிரியர், ஒரு மாணாக்கன் ஒரு பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்றால், அவனை மட்டப் படுத்தாமல் அவன் வேறு பாடங்களில் மிக்க மதிப்பெண் பெற்றிருப்பதைக் கூறிப் பாராட்டி, பின்னர், இந்தப் பாடத்தையும் இன்னும் சிறிது நன்றாகப் படித்திருந்தால் இதிலும் மிக்க மதிப்பெண் பெற்றிருக்கலாம் என்று கூறி ஊக்கப்படுத்த வேண்டும். இது ஒருவகைக் கற்பிக்கும் முறை (Method of Teaching) இது போல கோவலன் சோர்ந்திருந்தபோது முன் அவன் ஆற்றிய உயரிய செயல்களைக் கூறிக் கூறி மாடலன் ஆறுதல் செய்திருப்பது சுவைக்கத்தக்கது.

தெய்வம் வெல்லல்:

காட்டு வழியில், கோவலன் நீர் வேட்கையைத் தீர்க்க, கவுந்தியையும் கண்ணகியையும் ஓரிடத்தில் அமர வைத்து விட்டு ஒரு பொய்கைக் கரையில் போய் நின்றான். அப்போது, அந்தக் காட்டில் உள்ள பெண் தெய்வம் ஒன்று, மாதவியின் தோழியாகிய வயந்தமாலையின் வடிவுகொண்டு வந்து, கோவலனிடம், மாதவியின் துயர நிலையைக் கூறி, அவள் வெறுப்பால் வயந்தமாலையாகிய என்னையும் துரத்தி விட்டாள். எனக்கு வேறு போக்கிடம் இல்லை. நீ காடு நோக்கிச் செல்வதைக் கேள்வியுற்று உன்னை அடையலாம் என்று இங்கு வந்தேன். நீதான் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி மயக்கியது. வழியில் ஒரு பெண் தெய்வம் வந்து மயக்கும் என மறையவன் ஒருவன் முன்னரே கூறிய செய்தி கோவலனது நினைவுக்கு வந்தது. உடனே அவன் கொற்றவையின் மறைமொழியை (மந்திரத்தை) உரு வேற்றினான் (செபித்தான்). உடனே அத்தெய்வம் அவ்விடம் விட்டு அகன்று விட்டது. செல்லுமுன், இதைக்