பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

சுந்தர சண்முகனார்


கோவலனின் கடவுள் கொள்கை

கோவலனின் கடவுள் கொள்கை என்ன? - அவன் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவன்? - என்பதை அறுதியிட்டு உறுதியாகக் கூறக்கூடிய தெளிவான அகச்சான்று சிலப்பதிகாரத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. அவன் கண்ணகியுடன் மதுரைக்குப் புறப்பட்டபோது, இடைகழியைக் கண்ணகியுடன் கடந்து சென்றான். அப்பால், திருமால் கோயில், புத்தன் கோயில், அருகன் கோயில் ஆகியவற்றை வலம் வந்து வழிபட்டானாம். பாடல்:

“நீள்கில வாயில் நெடுங்கடை கழித்தாங்கு
அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலஞ்செயாக் கழிந்து”

“பணைஐந்து ஓங்கிய பாசிலைப் போதி
அணிதிகழ் கீழல் அறவோன் திருமொழி
அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும்
இந்திர விகாரம் ஏழுடன் போகி” (8-14)

“ஐவகை கின்ற அருகத் தானத்து (18)

இலகொளி சிலாதலம் தொழுது வலங்கொண்டு” (25)

என்பது பாடல் பகுதி. பாம்பில் பள்ளி கொண்ட மணிவண்ணன் கோட்டம் என்பது திருமால் கோயில். “போதி - அறவோன் - இந்திர விகாரம் ஏழ்” என்பது புத்த விகாரம். “அருகத் தானத்து - சிலா தலம்” என்பது அருகன் இருப்பிடம். (நாடு காண் காதை)

வைணவம், பெளத்தம், சமணம் என்னும் முச்சமயத் தெய்வங்களையும் வேறுபாடின்றிக் கோவலன் வழிபட்டுள்ளான். சிவன் கோயில் இங்கே இடம் பெறவில்லை.

முதல்முதல் சமணப் பெண் துறவியாகிய கவுந்தியைக் கண்டபோது, கோவலன் அவரைக் கைதொழுது வணங்கியுள்ளான்.