பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

219


மகளாம் - என்பது போல் கதையைத் தொடங்குவார்கள். இளங்கோவடிகளும் இதே முறையைப் பின்பற்றியுள்ளார். புகார் என்னும் ஊராம்; அங்கே மாநாய்கன் என்று ஒருவர் இருந்தாராம்; அவருக்கு ஒரு மகளாம்; அவள் பெயர் கண்ணகியாம்; அவளுக்குப் பன்னிரண்டு அகவை நிரம்பிய போது திருமணம் செய்து வைத்தாராம் - என இளங்கோ கண்ணகி கதையைத் தொடங்கிச் சொல்லிக் கொண்டு போகிறார்.

கதையில் குலப் பெயரும் கூறுவது உண்டு. இளங்கோ குலப்பெயரை வெளிப்படையாகக் கூறாமல் மறைமுகமாகக் கூறியுள்ளார். கண்ணகியின் தந்தை பெயர் மாநாய்கனாம். கோவலனின் தந்தை பெயர் மாசாத்துவானாம். நாய்கன் என்பதற்கும் சாத்துவான் என்பதற்கும் வணிகன் என்பது பொருள். மாநாய்கன் என்றால் பெரிய வணிகன் - மாசாத்துவான் என்றாலும் பெரிய வணிகன் என்பதே பொருள். கூர்ந்து நோக்குங்கால் இந்தப் பெயர்கள் சாதிப் பெயர்களாகத் தெரிகின்றன. இந்த இரண்டு பெயர்களைத் தவிர, சிலப்பதிகாரக் கதை மாந்தருள் வேறு எவரும் சாதிப் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. மாங் காட்டுமறையவன் என்பது இன்னதன்று எனவே, மாநாய்கன், மாசாத்துவான் என்பன அவர்களின் இயற்பெயர்களா என ஐயுறச் செய்து - குலப்பெயர்களாகத் தோன்றுகின்றன. மாதிரிக்கு இரு பெயர்களைக் கூறுவோம்; அதாவது: முத்தையன் மாநாய்கன் - வடிவேலன் மாசாத்துவான் என்ற பெயர்களாக இருக்கலாம் என்று வைத்துக்கொள்வோம். செட்டியார் குலத்தில் மிகவும் பெயர் பெற்ற பெரியவர் ஒருவரை அவரது இயற்பெயரால் சுட்டாமல், செட்டியார் என்றே கூறுவதுண்டு. குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில், செட்டியார் என்றால் அவர் ஒருவரைத்தான் குறிக்கும். இது போலவே, முதலியார் என்றால் மிகவும் பெயர் பெற்ற பெரியவர் ஒருவரையே குறிக்கும். இது உலகியல்.