பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

221


உருவமும் திரிந்துள்ளது. மேலும், தந்தைமார்களின் பெயர்களைச் சொன்ன இளங்கோ தாய்மார்களின் பெயர்களைச் சொல்லாதது ஒரு குறைபாடாகும். படகு வலிப்பவரின் பாடல்களில், கோவலனின் தாய் பெயர் ‘வண்ண மாலை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

1960-ஆம் ஆண்டு யான் மலர் மணம் என்னும் ஒரு புதினம் எழுதி வெளியிட்டேன். அதில், கதைத் தலைவன் - தலைவியரின் தந்தையர்களின் பெயர்களை மட்டும் கூறியிருந்தேனே தவிர, தாயர்களின் பெயர்களை அறிவிக்கவில்லை. எனது இந்தப் புதினத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த இராமநாதபுரத்து அறிஞர் ஒருவர், நான் தாய்மார்களின் பெயர்களையும் அறிவித்திருக்க வேண்டும் என்று என்னிடம் தெரிவித்தார். தந்தையர்களின் பெயர்களே குழப்பமாக இருக்கும்போது, தாய்மார்களின் பெயர்களை இளங்கோ எவ்வாறு அறிந்து கூறியிருக்க முடியும்?

பெயர்கள் பற்றி மேலே யான் வெளியிட்டுள்ள கருத்து முடிந்த முடிபு அன்று. குழப்பமாகவே உள்ளது. தெருக் கூத்துப் பெயர்களையும் சிலப்பதிகாரப் பெயர்களையும் ஒத்திட்டுப் பாராமல் இருந்தால் குழப்பம் இல்லை. மற்றும், இருவர் பெயர்களும் ‘மா’ அடை பெற்று ஒரே பொருள் உடையனவாய் இல்லாமல், வேறு வேறு பொருள்கள் உடையனவாய் இருந்திருப்பினும் குழப்பத்திற்கு இடம் இல்லை. இதை அறிஞர்களின் ஆய்வு முடிபிற்கு விட்டு விடுகிறேன்.

தன்னை விட்டு நீங்கிய கணவன் கோவலனைக் கண்ணகி கண்டிக்கவோ - கடிந்து பேசவோ இல்லை. கணவன் பிரிந்ததால் தாய் வீட்டிற்குச் சென்று விடவில்லை. கணவன் அழைத்ததும், அவனோடு ஊடல் கொள்ளாமல்