பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

சுந்தர சண்முகனார்


முடியும்? இருவரும் உடலுறவு கொண்டே சில்லாண்டுகள் மனையறம் நடத்தினர்.

அந்திமாலைச் சிறப்புச் செய்காதை

சில்லாண்டு உடனுறை வாழ்க்கை புரிந்து பின்னர் மாதவியிடம் கோவலன் சென்று விட்டபிறகு, கண்ணகியின் நிலை பின்வருமாறு இருந்தது:

கண்ணகி காலில் சிலம்பு அணிந்திலள். இடையில் மேகலை இல்லை. மார்பகத்தில் குங்குமம் எழுதிலள். காதில் குழை இல்லை. முகத்தில் வியர்வை இல்லை. கண்கட்கு மை தீட்டிலள். நெற்றியில் பொட்டு வைத்திலள். சிரிக்கும் அழகை இனிக் கோவலன் பெறமுடியாதபடி முகம் வாடினாள். கூந்தலுக்கு நெய்யணி பூசி அணி செய்திலள். மங்கல நாணாகிய தாலியைத் தவிர, வேறெதையும் பூண்டிலள். துயரமே உருவாயிருந்தாள். பாடல்:

“அஞ்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியின் பிறிதணி மகிழாள்
கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்
திங்கள் வாண்முகம் சிறுவியர் பிரியச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்
பவள வாள் நுதல் திலகம் இழப்பத்
தவள வாள்ககை கோவலன் இழப்ப
மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக்

கையறு நெஞ்சத்துக் கண்ணகி” (47-57)

என்பது பாடல் பகுதி, கணவனைப் பிரிந்த கண்ணகி ஏறத்தாழக் கைம்பெண்வாழ்க்கையே வாழ்ந்தாள் என்று சொல்லுமளவில் இருந்தாள். அவள் அணிந்திருந்த மங்கல-