பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

243


வெண்டைக்காய்க்கு Lady’s Finger (பெண்ணின் விரல்) என்ற பெயரை ஆங்கிலேயர் வழங்கினர் போலும், காய்கறி நறுக்கியதால் கைவிரல்கள் சிவந்தன. அடுப்பின் கரிந்த புகையால் கண்கள் சிவந்தன. கொடுவாய்க் குயம் = வளைந்த அரிவாள்மனை. விடுவாய் செய்தல் = அரிதல். மடைமை = சமையல் கலை. உணவு ஆக்குதலை எளிமையாய் எண்ணிவிடக் கூடாது. அந்தக் கலை பற்றிய நூலே உள்ளது. மணிமேகலை என்னும் நூலில் ‘மடை நூல் செய்தி’ (2-22) என மடை நூல் (சமையல் கலை நூல்) இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. கண்ணகி அவள் அறிந்த அளவு ஆக்கினாளாம்.

இந்த அமைப்பை நோக்குங்கால், கண்ணகியின் பிறந்தகமும், புக்ககமும் பெருஞ் செல்வக் குடும்பமாகலின் உணவு ஆக்குதற்குப் பணியாட்கள் இருந்திருப்பர் என்பது புலனாகிறது. கண்ணகி முன்பே பயின்றிருப்பாளானால் கைவிரல்களும் கண்களும் சிவக்கா. பெரிய விறகை வைத்துக் கொளுத்தினால் உடனே தீ பற்றாது. முதலில் சிறிய சுள்ளிகளைக் கொளுத்திப் பின்பு அவற்றோடு பெரிய கட்டைகளை இணைத்து எரியச் செய்வது வழக்கம். ஈண்டு நாவுக்கரசரின் தேவாரப் பாடல் பகுதி ஒன்று நினைவுக்கு வருகிறது. திருவானைக்காப் பதிகத்தின் முதல் பாடலில்,

“செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை

சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்”

என்று கூறியுள்ளார். ஈமச் சிதையில் பெரிய விறகுக் கட்டையைத்தான் அடுக்குவது வழக்கம். அங்ஙனமிருந்தும், நாவரசர் சிறு விறகால் தீ மூட்டி என்று கூறியிருப்பது ஏன்? கொளுத்தப்படுகின்ற உடம்பு பெரிய விறகு - விறகுக் கட்டையினும் நீளத்தாலும், பருமனாலும் பெரியது உடம்பு. அதனால்தான் சிறு விறகால் தீ மூட்டி என்றார். இங்கே, கண்ணகிக்கு உதவியாக ஐயை வைக்கோலால் விறகு பற்றச்-