பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

247


எறும்பு போன்றன. தண்ணீர் பசையைத் தாண்டி இலைக்கு வரா; மற்றொன்று. இலை அப்பால் இப்பால் திடீரென நழுவாது - இடம் பெயராது. சிலர் உண்ணும்போது அவர்களின் இலைகள் அடுத்தவர் இலைமீது திடீரெனப் பாய்ந்து விடுவது இங்கே நினைவு கூரத்தக்கது.

ஒருவர்க்கு மயக்கம் வந்து விடின், மயக்கம் நீக்க முகத்தில் தண்ணீர் தெளிப்பதுண்டு. இங்கே நிலமகளின் மயக்கத்தை நீக்கத் தெளிக்கப்பட்டதாகப் புலவர் தாமாக ஒரு குறிப்பை ஏற்றிச் சொல்லியிருப்பது தற்குறிப்பு ஏற்ற அணியாகும். நிலமகளின் மயக்கத்தின் காரணம், இன்னும் சிலமணி நேரத்தில் கோவலன் கொலை செய்யப்படுவான் என்பதை அறிந்ததாய் இருக்கலாமோ!

குமரி வாழை என்பது, குலைபோடாத வாழை. இதன் குருத்து இலையின் உட்பகுதியை நன்றாக விரித்து அகலம் உடையதாக்கினாள். குருத்து இலையில் காகமோ வேறு பறவையோ எச்சம் இட்டிராது. தூய்மையாகவும் பார்ப்பதற்குப் பொன்னிறமாய் அழகாகவும் அகலமாகவும் இருக்கும். உலகியலில் இத்தகைய வாழை இலையைத்‘ தலை வாழை இலை’ என்பர்.

இலையின் வளப்பத்தைக் கொண்டு விருந்தின் சிறப்பைக் கணிப்பதுண்டு. வேடிக்கையாக ஒரு கதை சொல்வதுண்டு. ஒருவர் மற்றொருவரிடம், யான் பெரிய செல்வா விட்டு விருந்திற்குப் போயிருந்தேன். இலை மிகவும் பெரியது. இலையின் எதிர் ஓரத்தில் பரிமாறப்பட்டிருக்கும் காய் கறிகள் கைக்கு எட்டாமையால் ஓர் அகப்பை போட்டிருந்தார்கள்; அந்த அகப்பையால் காய்கறிகளை இழுத்து இழுத்து உண்டோம் - என்றாராம். உடனே இரண்டாமவர் முதலாமவரை நோக்கி, யான் ஒரு சமீன்தார் வீட்டு விருந்திற்குப் போயிருந்தேன். மிகவும் பெரிய இலை போட்டிருந்தார்கள். காய் கறிகளை இழுத்து உண்ண ஓர்