பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

253


நீள் நில விளக்கு

கோவலன் உணவு கொண்டு உரையாடிக் கண்ணகியை விட்டுப் பிரிந்து கடைத் தெருவுக்குப் புறப்படுவதற்கு முன், பின்வருமாறு தன் ஆவல் தீரக் கண்ணகியைப் பாராட்டுகிறான்:

“குடிமுதல் சுற்றமும் குற்றிளை யோரும்
அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி
நாணமும் மடனும் கல்லோர் ஏத்தும்
பேணிய கற்பும் பெருந்துணை யாக
என்னொடு போந்துஈங்கு என்துயர் களைந்த
பொன்னே கொடியே புனைபூங் கோதாய்
நாணின் பாவாய் நீள்கில விளக்கே
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி
சீறடிச் சிலம்பின் ஒன்றுகொண்டு யான்போய்

மாறி வருவன் மயங்கா தொழிக” (84-93)

என்பது பாடல் பகுதி. புகாரில் வீட்டில் இருந்துபோது இருந்த நால்வகைத் துணைகளைத் துறந்து வேறு நால்வகைத் துணைகளைக் கைக்கொண்டு கண்ணகி கோவலனுடன் வந்தாளாம்.

முதல் நால்வகைத் துணை- 1: குடி முதல் சுற்றம் = குடியின் முதன்மையான பெற்றோர் - மாமன் மாமியார் முதலிய சுற்றம் 2: குற்றிளையோர் குற்றேவல் செய்வோர். 3: அடியோர் பாங்கு = ஆட்டுவாள், ஊட்டுவாள், ஒதலுறுத்துவாள், நொடி பயிற்றுவாள், கைத்தாய் என்போர். 4: ஆயம் = தோழியர் குழாம்.

இப்போது உடன் கொண்டு வந்துள்ள நான்கு துணைகள் - 1: நாணம், 2: மடன், 3: நல்லோர் ஏத்து = நல்லோர் போற்றும் புகழ், 4: பேணிய கற்பு: தன்னைக் காக்கின்ற கற்பு. தனது துயர் போய் விட்டதாகக் கோவலன் கருது-