பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

279


பிரிந்தமைக்கும் ஆரவாரச் செயல்கட்கும் மாதவி காரணமாயிருந்தாள் என்ற குறைபாடு - குற்றச்சாட்டு மாதவிக்கு உரியது என்பது புலப்படும்.

ஆனால், இதை நடுநிலைமையோடு வேறொரு கோணத்திலும் நோக்கவேண்டும். அதாவது:- ஒருவன் மது அருந்திக் கெடுவானானால் அது மதுவின் குற்றமா? ஒருத்தி நஞ்சு உண்டு இறப்பாளானால் அது நஞ்சின் குற்றமா? இல்லை - இல்லவே யில்லை. கெட்டது மது அருந்தியவனின் குற்றம் - மது என்ன செய்யும் இறந்தது நஞ்சு உண்டவளின் குற்றம் - நஞ்சு என்ன செய்யும். இவ்வாறே, மாதவியோடு சேர்ந்து கோவலன் கெட்டு விட்டான் எனில், அது மாதவியின் குற்றமா? இல்லை - கோவலனின் குற்றமே அது. ஆனால், மதுவும் நஞ்சும் தீயனபோல், மாதவியையும் தகாதவள் என்று கூறவேண்டி வரும். கண்ணகியைப் பொறுத்தவரையும் - குடும்பத்தாரைப் பொறுத்தவரையும் - ஏன், கோவலனைப் பொறுத்தவரையுங்கூட மாதவி தகாதவளே.

மாதவியின் நிறை

ஆனால், நாம் மாதவியை இப்படியே தகாதவளாக்கி விட்டுவிட்டு அப்பால் சென்று விடமுடியாது. மாதவியிடம் இருந்த நல்ல இயற்கூறுகளையும் சொல்லித்தான் தீர வேண்டும். அவள் பின்னால் பெற்ற நிறையினால் முன்னால் இழைத்த குறை மறைந்தது.

“கைப்பிடி நாயகன் தூங்கையிலே
     அவன் கையை எடுத்து
அப்புறம் தன்னில் அசையாமல்
     முன்வைத்து அயல் வளவில்
ஒப்புடன் சென்று துயில்நீத்துப்
     பின்வந்து உறங்கு பவளை
எப்படி நான் நம்புவேன்

     இறைவா கச்சி ஏகம்பனே”