பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284

சுந்தர சண்முகனார்


இது மிகவும் வருத்தமாயிருக்கிறது. என் பேர்த்தி மணிமேகலையை விடுதலை செய்து என்னோடு என் வீட்டிற்கு அனுப்புங்கள் என்று வேண்டினாள்.

“பூவிலை ஈத்தவன் பொன்றினன் என்று
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும்”
(24:19, 20)
...........................................................
“நன்மனம் பிறந்த நாடகக் கணிகையை

என்மனைத் தருக என...” (24:75, 76)

மேலுள்ள முதல் இரண்டு அடிகட்கும் உ.வே. சாமிநாத ஐயர் தரும் பொருளாவது:- மாதவி தனது பரத்தமைத் தொழிலை நீத்துத் தவச் சாலையை அடைந்தததும் என்ப தாகும். பூவிலை ஈத்தவன் கோவலன். பூவிலை என்றால் அற்றைப் பரிசம் (அன்றாடம் தரும் பொருள்). இந்த வழக்காறு சிலப்பதிகாரத்திலும் ‘பூவிலை மடந்தையர்’ (5:51) என வந்துள்ளது. புணர்ச்சிக்கு அன்றாடம் பொருள் வாங்குவர் பொது மகளிர் என்பது இதன் பொருள்.

சிலம்பிலும் இப்படி ஒரு செய்தி உள்ளது: சேரன் செங்குட்டுவனிடம் மறையவன் மாடலன், கோவலன், கண்ணகி, மாதவி, மணிமேகலை ஆகியோரின் நிலை பற்றிக் கூறுகிறான். மாதவி தன் தாய் சித்திராபதியிடம், மணிமேகலையைக் கணிகையர் கோலம் பூணச்செய்து மிக்க துன்பம் தரும் இழி தொழிலான பரத்தமைத் தொழிலில் விடாதே - யான் இழி தொழிலில் ஈடுபடாமல் நல்ல நெறியைப் பின்பற்றுவேன் என்று கூறினாளாம் - என்று மாடலன் கூறினான்.

“மற்றது கேட்டு மாதவி மடங்தை
நற்றாய் தனக்கு, கல்திறம் படர்கேன்
மணிமே கலையை வான்துயர் உறுக்கும்

கணிகையர் கோலம் காணாது ஒழிக” (27:103-106)