பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

289


உள்ளது. கோவலன் வழியில் ஒருநாள் நீர் அருந்த ஒரு பொய்கையை அடைந்தபோது, மயக்கும் கானுறை தெய்வம் ஒன்று வயந்தமாலை வடிவுடன் வந்து கோவலனிடம் பின்வருமாறு கூறிற்று:

ஐயனே! நீங்கள் என் தலைவி மாதவியைப் பிரிந்ததும், கடிதம் கொண்டு வந்த நான் உங்களைத் திறமையாக அழைத்து வரவில்லை என்று என்மேல் சினந்து வெறுப்படைந்து, மேலோராயினும் நூலோராயினும் தீயது என்று ஒதுக்கும் கணிகையர் வாழ்க்கை இழிந்தது - கடைப்பட்டது - அதனால்தான் கோவலன் நம்மை ஒதுக்கி விட்டான் என்று கூறி என்னையும் துரத்தி விட்டாள். அதனால் உன்னிடம் வந்துள்ளேன் - என்று தெய்வம் கூறி மயக்க முயன்றது. கோவலன் கொற்றவை மந்திரத்தை உருவேற்றி அந்தப் போலி வயந்தமாலை வடிவில் வந்த தெய்வத்தை விரட்டி விட்டான். இங்கே, சிலம்பில், மாதவி கூறியதாகச் சொல்லப்பட்டனவற்றுள் உள்ள

“மேலோ ராயினும் நூலோ ராயினும்
பால்வகை தெரிந்த பகுதியோ ராயினும்
பிணியெனக் கொண்டு பிறக்கிட் டொழியும்
கணிகையர் வாழ்க்கை கடையே போன்ம்”

(11: 180-183)

என்னும் நமக்கு வேண்டிய பாடல் பகுதியை மட்டும் எடுத்துக் கொள்வோம் ‘கணிகையர் வாழ்க்கை கடையே’ (கடையான பரத்தமைத் தொழில்) என மாதவி சொன்னதாகக் கானுறை தெய்வம் கூறிற்று. கானுறை தெய்வம் கூறியதாகத் தெரிவித்திருப்பவர்யார்? - அவர் இளங்கோவடிகளே. இதனாலும் மாதவியின் குலம் அறிய வரும்.

தேவடியார் என்பது தெய்வத்திற்கு அடியவர் - தெய்வ பூசனைக்கு உரியவர் என்னும் பொருளைக்