பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

298

சுந்தர சண்முகனார்


சிலர் ‘சோதிடம்’ கூறுகின்றனர். தெய்வம் மக்கள் உருவில் வந்து தேவந்தியை மணந்து கொண்டது என்பதை நம்ப முடிந்தால்தான், இருவரும் உடல் உறவு கொள்ளவில்லை என்பதையும் நம்ப முடியும். ஒருவகைக் காப்பியக் கற்பனையே இது.

தேவந்தி ஒருநாள் மாலை வந்து, நீ கணவனை அடைவாயாக என்று வாழ்த்தினாள். கண்ணகி பின்னால் நடக்க இருப்பதைக் குறிப்பாக அறிவிப்பது போலத் தான் கண்ட தீய கனவைத் தேவந்தியிடம் கூறினாள். தேவந்தி கண்ணகியை நோக்கி, இது பழைய ஊழ்வினைப்பயன் - சோம குண்டம், சூரியகுண்டம் என்னும் இரு குளங்களிலும் குளித்துக் காமவேளின் கோயில் சென்று வணங்கினால் கணவனை மீண்டும் பெறலாம் என்று சூழ்வுரை (ஆலோசனை) கூறினாள். கேட்ட கண்ணகி, குளங்களில் முழுகிக் கடவுளைத் தொழுதல் எனக்குத் தகாது என மறுத்துரைத்து விட்டாள்.

பின்னாளில் கோவலன் கொலையுண்ட செய்தியறிந்து மதுரைக்குச் சென்றாள் தேவந்தி. பின் அங்கிருந்து, ஐயையுடன் சேரநாட்டில் உள்ள கண்ணகி கோயிலுக்குச் சென்று அரற்றினாள். தன்மேல் கடவுள் (சாமி) ஏறிப் பல கூறினாள். கண்ணகியின் தாயும் கோவலன் தாயும் பிள்ளைகளின் இறப்பைப் பொறாது தாங்கள் இறந்து போனதையும், இருவரின் தந்தைமார்களும் மாதவியும் துறவு பூண்டதையும் தெய்வமாக உள்ள கண்ணகிக்குக் கூறினாள். மணிமேகலையின் துறவு பற்றிச் சேரனிடம் விவரித்தாள் - கண்ணகி முன், காவல் பெண்டு, அடித்தோழி என்னும் இருவருடன் சேர்ந்து தேவந்தி மாறி மாறிப் பாடினாள். தன்மேல் தெய்வம் ஏறியபின், அங்கிருந்த சிறுமியர் மூவர்மீது தண்ணிர் தெளிக்கச் செய்து அவர்களின் முன் பிறப்பை அறியச் செய்தாள். சிறுமியர்