பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

301



நீங்கள், முதுவேனில் காலத்தில் பயணம் தொடங்கியமை மிகவும் இரங்கத் தக்கது. நீங்கள் இவ்வழியே காடு மலை கடந்து செல்லின், சிவனது சூலம் போல் மூன்று வழிகள் பிரிந்து காணப்படும். மூன்றனுள் வலப்பக்க வழியில் செல்லின் எதிர்ப்படும் பாண்டியன் சிறுமலையைக் கடக்க வேண்டும். மூன்றனுள் இடைப்பட்ட (நடுவில் உள்ள) வழியாகச் செல்லின் எளிதாய்ச் செல்லலாம்; ஆயினும், வழியில் மயக்கும் தெய்வம் ஒன்று உண்டு; அதனிடமிருந்து தப்பித்துச் செல்லல் வேண்டும்.

இடப்பக்க வழியாகச் சென்றால் திருமால் இருஞ்சோலை மலை அகப்படும். ஆங்கு ஒரு பிலம் உண்டு. பிலத்தில் புக வேண்டுமாயின் திருமால் திருவடியை நினைத்துக் கொண்டு மலையை மும்முறை வலம்வர வேண்டும். வரின் ஒரு பெண் தெய்வம் தோன்றிச் சில வினவுவாள். பதில் இறுப்பின் வாயில் திறப்பாள். உள்ளே சென்று சில வாயில்களைக் கடப்பின், இரட்டைக் கதவு உள்ள ஒரு வாயில் தெரியும். ஆங்கு உள்ள ஒரு பெண் தெய்வம் சில வினவுவாள். தக்க விடையிறுப்பின், மூன்று பொய்கைகளைக் காண்பிப்பாள். அவற்றின் பெயர்கள் புண்ணிய சரவணம், பவ காரணி, இட்ட சித்தி என்பன. புண்ணிய சரவனத்தில் மூழ்கின் ஐந்திற வியாகரண நூல் அறியலாம். பவ காரணியில் மூழ்கின் பழம் பிறப்பு உணரலாம். இட்ட சித்தியில் மூழ்கின் நினைத்தன எய்தலாம் - என இன்னும் பல தொடர்ந்து கூறினான்.

மறையவன் கூறியனவற்றைக் கேட்டதும், சமண சமயச் சார்புடைய கவுந்தி, திருமால் சார்பாகச் சொல்லிய மறையவன் கூற்றை மறுத்துரைத்தாள். அதாவது, நீ சொல்கிறபடியெல்லாம் செய்ய வேண்டுவது இல்லை. நீ கூறும் ஐந்திர வியாகரணத்தை எங்கள் அருகன் நூலைக் கொண்டே அறிந்து கொள்ளலாம். பழம், பிறப்பை