பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

27


மணிமேகலை - ஊர் அலர் உரைத்தகாதையில் சித்திராபதியால் அனுப்பப்பட்ட வயந்த மாலையிடம் மாதவி இவ்வாறு சொன்னதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது:

“காவலன் பேரூர் கனையெரி முட்டிய

மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை” (2:54, 55)

என்பது பாடல் பகுதி. இராமாயணத்தில், இராமன் தாய் கைகேயி - கைகேயியின் மகன் இராமன் என்றும், பரதன் தாய் கோசலை - கோசலையின் மைந்தன் பரதன் என்றும் உயரிய பண்பின் அடிப்படையில் கூறும் உறவுமுறை போன்றது இது. எனவே, இரண்டையும் ஒரு குடும்பக் காப்பியம் எனலாம்.

மலைவளம் காணவந்த சேரன் செங்குட்டுவனுடன் வந்த இளங்கோவைச் சாத்தனார் கண்டு, கோவலன் கொலையுண்டதும் பாண்டியனும் தேவியும் இறந்தமையும் ஊர் எரிவும் கூறி, பின்னர்க் கண்ணகிமுன் மதுராபதித் தெய்வம் தோன்றி அவளது பழம் பிறப்புச் சாப வரலாற்றையும், பதினான்காம் நாள் கோவலனைக் காண்பாள் என்பதையும் கூறியதை யான் அறிந்துள்ளேன் எனக் கூறினார். செங்குட்டுவனிடமும் இச்செய்தி கூறப்பட்டது.

உடனே இளங்கோ, சிலப்பதிகாரம் என்னும் பெயரால் ஒரு காப்பியம் நாம் இயற்றுவோம் என்றார். மூவேந்தர்க்கும் பொதுவாகிய அப்படியொரு நூலை இளங்கோ அடிகளே இயற்றுமாறு சாத்தனார் கூற அடிகள் சிலப்பதிகாரம் இயற்றினார். சாத்தனாரும் மணிமேகலைக் காப்பியத்தை இயற்றினார்.

சிலப்பதிகாரப் பதிகத்தின் இறுதியில் உள்ள,

“உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்
உரைசால் அடிகள் அருள, மதுரைக்

கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்”
(87-89)