பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

311


தீதிலள் முதுமகள் செவ்வியள் அளியள்
மாதரி தன்னுடன் மடங்தையை இருத்துதற்கு
ஏதம் இன்றென எண்ணினள்" (116-124)

என்பது பாடல் பகுதி. யார் யாருக்கு என்னென்ன சிறப்பாகக் கிடைக்கிறதோ அதை - அதைக் கடவுளுக்குப் படைப்பர். ஆயர் மகளிடம் பாலுக்குக் குறைவு இல்லை. பால் பேறு (பால் பாக்கியம்) அவளுக்கு இருந்ததால் பால் படையல் செய்தாள். பண்பினள் ஆதலின், கவுந்தியின் அடியைத் தொட்டு வணங்கினாள். ஆயர் முதுமகள் - தீதிலள் முதுமகள் என இரண்டிடங்களில் இளங்கோ முதுமகள் என்று கூறியுள்ளாரே! ஆம்! முதலில் கூறிய ஆயர் முதுமகள் என்பது, ஆயர் குலத்தில் பெருமை பெற்றவள் (பெரிய மனுஷி) என்பதைக் குறிக்கிறது. தீதிலள் முதுமகள் என்பது, தீது அறியாத அகவை (வயது) முதிர்ந்த பெண் - இவளிடம் அடைக்கலம் தரலாம் என்பதைக் குறிக்கிறது. கவுந்தி தன் அடியை அவள் தொழுததுமே, இவள் செவ்வியள் - அளியள் என்ற முடிவுக்கு வந்து விட்டார். இவள் வீட்டில் அடைக்கலமாக விடலாமா? ஆயர்கள் ஒரு தீமையும் அறியாதவர்கள் - அவர்களின் தொழில் வஞ்சகம் உடையதன்று - ஆக்களைப் பிணி, துன்பம் இல்லாமல் காப்பவர்கள் - அதற்கு நல்ல தினி தந்து பேணுபவர்கள் (ஒம்புபவர்கள்). எனவே, அவர்கள் விட்டில் கண்ணகியை ஒப்படைக்கலாம். இதில் ஒரு தவறும் இல்லை - என்பது கவுந்தியின் முடிவு. (இங்கே, ஆயர்கள் சிலர் பாலில் தண்ணிர் கலப்பதைக் குற்றம் எனக் கொள்ளலாகாது. எல்லாரும் கலப்பதில்லை. வேறு பொருளைக் கலந்தாலே நோய் வரும் - தண்ணீர் கலப்பதனால் எந்தப் பிணியும் வராது. எவ்வளவு நீர் கலந்தாலும் வெள்ளையாய் இ ரு ப் ப து, பால் கொடுத்துவைத்த பேறு ஆகும்). இவ்வாறாகக் கவுந்தியடிகளின் வாயிலாக மாதரியின் மாண்பை இளங்கோ நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.