பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316

சுந்தர சண்முகனார்



என்பது பாடல் பகுதி. ஆக்கும் கலங்கள், உயர்வகைச்சாலி அரிசி, பால், பாலிலிருந்து கிடைக்கும் நெய், தயிர் ஆகியவற்றுடன் கொழுமையாய்த் திரண்டிருக்கும் முதிர்ந்த பலாக்காய், வெள்ளரிக்காய், மாதுளங்காய், மாம்பழம், வாழைப்பழம் என்பனவும் கொடுக்கப்பட்டன. பலா, வாழை, மா என்னும் மூன்றும் இடும் உணவை 'முப்பழமும் சோறும்' என்று கூறுவர். இந்த மூன்றும் கண்ணகிக்குக் கொடுக்கப்பட்டன. கோளிப்பாகல் என்பது பலாக்காய். கொழுங்கனித் திரள்காய்’ என்பதிலுள்ள கனி என்பது காய் முதிர்ந்துள்ள நிலையைக் குறிக்கிறது. சுளையாகப் பழுப்பதற்கு முன், பலாக்காயைக் கொடுவாள் கத்தியால் கொத்திக் கொத்திக் தூளாக்கிக் கறி பண்ணுவார்கள். இந்த நிலையிலுள்ள காயைக் கொத்துக்காய் என்பர்.

இங்கே, 'மாண்புடை மரபின் கோளிப் பாகல்' என்பதில் ஒரு சிறந்த கருத்து மறைந்துள்ளது. இந்தப் பகுதிக்கு ந. மு. வேங்கடசாமி நாட்டார் எழுதியுள்ள உரைப்பகுதி அதிலுள்ளாங்கு வருக;

"மாண்புடை மரபிற் கோளிப் பாகல் கொழுங் கணித்திரள் காய் = மாட்சிமையுடையோர் கொடுக்கும் தன்மை போலப் பூவாது காய்க்கும் பலாவினுடைய கொழுவிய திரண்ட முதிர்ந்த காய் பெரியோர் சொல்லாமலே செய்தல் போலத் தான் பூவாதே காய்த்தலின், மாண்புடை மரபிற் கோளிப் பாகல் எனப்பட்டது. கோளி = பூவாது காய்க்கும் மரம். பாகல் = பலா, கோளிப் பாகல்" - என்பது உரைப் பகுதி. இக்கருத்தோடு ஒத்த பாடல் ஒன்று சிறுபஞ்சமூலம் என்னும் நூலில் உள்ளது;

"பூவாது காய்க்கும் மரமுமுள கன்றறிவார்
மூவாது மூத்தவர் நூல்வல்லார்"
(22)

என்பது பாடல் பகுதி. பூவாமலேயே காய்க்கும் மரம் போல, நல்லதறிவாரும் நூல் வல்லவரும், அகவை முதிராத