பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

317


இளைஞராயிருப்பினும் அகவை முதிர்ந்த பெரியோராக மதிக்கப் பெறுவர் - என்பது கருத்து பூவாது காய்க்கும் மரம் கோளி எனப்படும் என்பதை,

"கோளி பூவாது காய்க்கும் குளிர்மரம்" (4 - 80)

என்னும் திவாகர நிகண்டு நூற்பாவாலும் அறியலாம்.

அத்தி, அரசு, ஆல், அன்னாசி, பலா ஆகியவை பூவாது காய்க்கும் மரங்கள் ஆகும். பூவாது காய்ப்பது என்றால் என்ன? எப்போதே ஒரு முறை வருபவரைப் பார்த்து உங்கள் வருகை 'அத்தி பூத்தாற் போல்' உள்ளது என்பது உலகியல். அத்தி முதலியவை பூக்காமலேயே காய்க்கும் என மக்கள் எண்ணிக் கொண்டுள்ளனர். அத்தி, அரசு, அன்னாசி, ஆல், பலா ஆகியவற்றிற்கும் பூக்கள் உண்டு. இவற்றில், பல பூக்கள் ஒன்றாய்ச் சேர்ந்து புற இதழால் மூடப்பட்டு உருண்டை வடிவம் பெறுகின்றன. உள்ளேயே மகரந்தச் சேர்க்கை பெற்றுக் காய்த்துக் கனியாகின்றன. ஒவ்வொரு காயும் பல பூக்களின் திரட்சி என்று கொள்ளல் வேண்டும். இந்தக் கோளி இனங்களுள் அளவாலும் சுவையாலும் தலைமை தாங்குவது பலாதான். இதைப் பெரும்பாணாற்றுப் படை என்னும் நூலில் உள்ள

"கொழுமென் சினைய கோளி யுள்ளும்
பழம் மீக் கூறும் பலாஅப் போல்"
(407, 408)

என்னும் பாடல் பகுதியாலும் அறியலாம். இது பட்டறிவு (அனுபவம்) வாயிலாகவும் மக்கள் அறிந்ததேயாகும். இதனால்தான் இளங்கோவடிகள், "மாண்புடை மரபின் கோளிப் பாகல்" என்றார்.

கண் கொள்ளாக் காட்சி

கண்ணகி உணவு அளிக்கக் கோவலன் உண்ண இவ்விதம் அவ்விருவரும் அளவளாவியது, மாதரிக்கும் மகள் ஐயைக்கும் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. "இந்தக் கோவலன்,