பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322

சுந்தர சண்முகனார்



போய்ப் போடப்பட்டது. அந்தக் குழந்தைதான் கண்ணன் என்பது கதை. இது கற்பனையாக இருக்கலாம். வசுதேவர் கண்ணனாகிய ஆண் குழந்தையைப் போட்டுவிட்டு, மாற்றாக, அசோதை பக்கத்தில் கிடந்த பெண் குழந்தையை எடுத்துப் போனாராம். பெண் குழந்தை எங்கே என்று அசோதையோ - மகப்பேறு (பிரசவம்) பார்த்த மகளிரோ தேட மாட்டார்களா? பிறந்தது பெண் குழந்தையாயிற்றே - ஆண் குழந்தை எப்படி வந்தது என்று ஐயுற மாட்டார்களா? இதைச் சரி செய்ய (அட்ஜஸ்ட்மெண்ட்) மாயை பெண் குழந்தையாக வந்தது என்று கதை கட்டப்பட்டுள்ளது. எனவே இது கற்பனையாகத்தான் இருக்க வேண்டும். கண்ணன் ஆயர்குலச் சூழ்நிலையிலேயே இருந்தான். ஆயர்குல நப்பின்னையை மணந்து கொண்டான். கண்ணனும் பலராமனும் யாதவ (ஆயர்) குல மன்னர்கள் என வரலாற்றாசிரியர்கள் கூறியுள்ளனர். இதற்கு நேரான சான்றாக, சிலம்பில் இளங்கோவடிகளால் குறிப்பிடப்பட்டுள்ள "ஆயர்பாடியில் அசோதை பெற்றெடுத்த" என்னும் பகுதி ஒன்றே போதுமே! இதை ஏலாதார் தள்ளி விடலாம். அறிஞர்களின் ஆய்வுக்காக இந்தக் கருத்து விடப்படுகிறது. இதுவே முற்ற முடிந்த முடியன்று.

ஆய்ச்சியர் குரவை

கோவலன் கடைத்தெரு நோக்கிச் சென்றதும், ஆயர்பாடியில் பலவகைத் தீய நிமித்தங்கள் தோன்றியதை மாதரி ஐயைக்குக் கூறுகின்றாள். பின்னர் ஆய்ச்சியர்கள் குரவைக் கூத்து ஆடச்செய்தாள். இந்தக் காதையில் திருமால் போற்றப்பட்டுள்ளார்.

மாதரியின் வைணவம்

மாதரி வைணவ சமயக் கோட்பாடுடையவள். குரவைக் கூத்து முடிந்ததும், பூவும் நறுமணப் புகைப்பொருளும்