பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

323


சந்தனமும் மாலையும் எடுத்துக் கொண்டு வையை ஆற்றின் கரையிலுள்ள திருமால் கோயிலுக்கு வழிபடச் சென்றாள். பாடல்:

"ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்
பூவும் புகையும் புனைசாந்தும் கண்ணியும்
நீடுநீர் வையை நெடுமால் அடியேத்தத்

தூவித் துறைபடியப் போயினாள்"
(துன்ப மாலை : 1-5)

என்பது பாடல் பகுதி. மாதரி இயக்கி என்னும் சிறுதெய்வத்தை வணங்கினும், பெரிய அளவில் வைணவ சமயக் கோட்பாடு உடையவள் என்பது விளங்கும். முல்லை நில ஆயர்களின் கடவுள் திருமாலே அல்லவா? "மாயோன் மேய காடுறை உலகமும்" என்பது, தொல்காப்பிய - அகத்திணையியல் (5) நூற்பா அல்லவா?

அடுத்த பிறவியிலும் மாதரி வைணவர்க்கு மகளாகப் பிறந்ததாக இளங்கோ அடிகள் கூறியிருப்பது வியப்புச் சுவை தருகிறது.

கோவலனும் கண்ணகியும் இறந்த செய்தியறிந்ததும் கோவலன் தாயும் கண்ணகியின் தாயும் உயிர்துறந்தனராம். அடைக்கலப் பொருளையிழந்த மாதரி தீக்குளித்து உயிர் நீத்தாளாம். இம்மூவருள் கோவலன் தாயும் கண்ணகியின் தாயும், வஞ்சி நகரில் அரட்டன் செட்டி என்பவனின் மனைவி வயிற்றில் இரட்டைப் பிறவிப் பெண்களாகப் பிறந்தனராம். மாதரியோ, திருவனந்தபுரத்தில் பாம்புப் படுக்கையில் அறிதுயில் கொள்ளும் திருமாலுக்குத் தொண்டு புரியும் குடும்பத்தில் பிறந்தாளாம்.

முன்னவர் இருவரும் செட்டி குலத்தைச் சேர்ந்தவ ராதலின் மறு பிறவியிலும் (அரட்டன் என்னும் செட்டியின்