பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25. பொற் கொல்லனின் பொய்மை

கோவலனைக் கொல்லச் செய்த பொற்கொல்லன் அரண்மனைப் பொற்கொல்லன் என்னும் தகுதி பெற்றவன்; அதற்கேற்ற மெய்ப்பையும் (சட்டையும்) கைக்கோலும் உடையவன்; கோவலனுக்கு எம தூதனானவன்; பொற்கொல்லர்கள் நூற்றுவருடன் வந்தவன்.

சிலம்பை மதிப்பிடுவாயா எனக் கேட்ட கோவலனைத் தொழுது, காலணியை மதிக்க இயலாதவனாயினும் வேந்தர்க்கு முடி செய்வேன் யான் என அடக்கமாகப் பதிலிறுத்தான் அந்தப் பொய்யன்.

கோவலன் காட்டிய வேலைப்பாடும் விலை மதிப்பும் மிக்க சிலம்பைக் கண்டு, தான் திருடிய அரசியின் சிலம்புக்கு இதை ஈடு கட்ட எண்ணிக் கோவலனைத் தன் இல்லத் தயலே இருக்கச் செய்து அரசனைக் காணச் சென்றான்.

கள்வர் திறன்

அரசியின் ஊடலைத் தணிக்கும் காம நோக்குடன் அரசியை நோக்கிச் சென்று கொண்டிருந்த பாண்டியனிடம் சிலம்பு திருடிய கள்வன் என் இல்லத்தருகே உள்ளான் எனக் கூறினன். அவனைக் கொன்று சிலம்பைக் கொணர்க என்று மன்னன் ஆணையிட்டான். அவ்வாறே சென்று, உடன் வந்தவரிடம் கோவலனைக் காட்டினான். கோவலனது தோற்றத்தைக் கண்ட சிலர், இவன் கள்வனாக இருக்க முடியாது என்றனர். அதை ஒவ்வாத பொற் கொல்லன், கள்வர்கள், மந்திரம், தெய்வம், மருந்து, நிமித்தம், தந்திரம், இடம், காலம், கருவி ஆகிய எட்டையும் படையாகக்