பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

326

சுந்தர சண்முகனார்


கொண்டு திருடுவதில் வல்லவர். இன்ன இன்னதால் இன்னின்னவாறு ஏமாற்றி விடுவர் என்றெல்லாம் கூறினன். மேலும், முன்னொருநாள் இரவில் இளவரசன் உறங்கிக் கொண்டிருந்தபோது அவனது மார்பு மாலையைக் கள்வன் ஒருவன் திருடினான். உடனே இளவரசன், உறையிலிருந்து வாளை உருவினான். கள்வன் வாள் உறையை இளவரசனிடமிருந்து பிடுங்கிக் கொண்டான். இளவரசன் வாளால் குத்தியபோதெல்லாம், கள்வன் அந்தக் குத்துகள் உறைக்குள் செருகிக் கொள்ளும்படிச் செய்துகொண்டேயிருந்து பின் மறைந்து விட்டான். எனவே, இவர்களை நம்ப முடியாது எனறான.

இதைக் கேட்டிருந்தவர்களுள் ஒருவன், முன்னொரு நாள் இரவில் ஒரு கள்வன் எதிர்ப்பட்டான் - அவனைக் கொல்ல யான் வாளை ஒங்கியபோது அவன் வாளைப் பறித்துக் கொண்டு ஓடிவிட்டான் - எனவே, இவர்களை நம்ப முடியாது என்றான். இவ்வாறு பேசிக்கொண்டிருந்த சூழ்நிலையில், கல்லாக் களிமகன் ஒருவன் கோவலனை வெட்டி வீழ்த்தினான்.

கண்ணகி வழக்குரைக்க, பாண்டியன் நெடுஞ்செழியன் இறந்ததும் முடிசூடிக்கொண்ட அவன் இளவலாகிய வெற்றி வேல் செழியன் ஆயிரம் பொற்கொல்லரைப் பலி கொடுத்தானாம்;

பொற்கொல்லன் ஒருவனது கொடுஞ் செயலால், கோவலன், பாண்டியன், நெடுஞ்செழியன், கோப்பெருந்தேவி, கண்ணகி, கண்ணகியின் தாய், கோவலன் தாய், கவுந்தி, மாதரி ஆகியோர் இறந்து பட்டனர். இதற்கு ஈடாக ஆயிரம் பொற்கொல்லரைப் பலியிட்டதால் இறந்தவர்கள் வந்துவிட்டார்களா?

எந்தத் தொழிலிலும் மறைவு உண்டு. பொல்கொல்லத் தொழிலில் இது சிறிது கூடுதலாக இருக்கலாம் என மக்கள்