பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

327


சிலம்போ சிலம்பு! 327

ஐயுறுவது உலகியலாயுள்ளது. இதனால் அந்த இனத்தையே பூண்டோடு அழிக்கும் முறையில் ஆயிரவர் பொற்கொல்லரைக் கொன்ற தும் கொடுங்கோலேயாகும். ஒருவனால் ஒரு குலமே கெட்ட பெயர் எடுக்கிறது.

மகாத்மா காந்தியண்ணலை நாதுராம்விநாயக கோட்சே என்னும் பிராமணன் கொன்றதனால், மற்ற பிராமணர்களையும் மக்கள் கோட்சே என்னும் பெயரால் சிறிது காலம் குறிப்பிட்டுக் கொண்டிருந்தது ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. இதுவும் முறையன்று.

இந்தக் கதைப் பகுதியிலிருந்து தெரிவதாவது:- களவு நூல் இருந்திருக்கிறது - களவு செய்வதற்குப் பயிற்சி கொடுக்கப்பட்டது - இதில் கைதேர்ந்தவர்கள் இருந்தனர் - என்னும் செய்தியாகும். இந்தக் காலத்திலும், களவு செய்வதற்காக இளைஞர்கட்குச் சில இடங்களில் பயிற்சி தரப்படுவதாகக் கூறப்படுகிறது.

கள் வருக்குக் கொலை ஒறுப்பு தரின் படிப்படியாக இது குறையலாம். கள்வனைக் கொல்லுதல் கடுங்கோல் அன்று - வெள்வேல் கொற்றம் என்ற பாண்டியன், அக்காலச் சட்டப்படி, கள்வனாகக் கருதப்பட்ட கோவலனைக் கொல்வித்தான். இந்தச் சட்டம் இருந்த அந்தக் காலத்திலேயே களவு நூலும் பயிற்சியும் இருந்தன - பொற்கொல்லன் போன்ற கள்வர்கள் இருந்தனர் - என்றெல்லாம் எண்ணுங்கால் தலை சுற்றுகிறது. தெருக்கூத்தில், இப்பொற் கொல்லனுக்கு 'வஞ்சிப்பத்தன்' என்பது பெயர். -

சிலம்பில் இளங்கோ, கள்வன் ஒருவனைக் குறிப்பிட்டுக் "கல்வியில் பெயர்ந்த கள்வன்" (16:199) எனக் கூறியுள்ளார். தனது களவு நூற்கல்விப் பயிற்சியினால் இடம் விட்டுப் பெயர்ந்து மறைந்து விட்ட கள்வன் - என்பது இதன் கருத்தாகும். களவு நூல் பயிற்சி இல்லாமலே, A-B, C, D.