பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

334

சுந்தர சண்முகனார்


 முதலியோர் வாழ்ந்த தெருக்கள் முதலியன பட்டினப்பாக்கப் பகுதியில் இருந்தன. அரண்மனை வட்டாரம் இந்தப் பகுதியில்தான் இருந்தது.

இந்த இருவேறு பாக்கங்களைப் பற்றி எண்ணுங்கால், எங்கும் பிரிவினை - எதிலும் பிரிவினை இருக்கும்போலும் என எண்ணத் தோன்றுகிறது.

மாறுபட்ட இரு வேந்தர்களின் பாசறைகளுக்கு நடுவே போர்க்களம் இருப்பதுபோல், இந்த இரண்டு பாக்கங்கட்கும் இடையே நாளங்காடி என்னும் பகுதி இருந்தது. அங்கே, முசுகுந்தச் சோழனுக்கு உதவிய பூதத்தின் கோயிலும் பலி பீடிகையும் இருந்தன. பலிபீடிகையில் பலியிடலும், ஆடல் பாடலும் நிகழ்ந்தது உண்டு. மற்றும் புகாரில் உள்ளனவும் நடந்தனவும் வருமாறு:

உயிர்ப் பலி மேடை

முசுகுந்தச் சோழன் காலத்திலிருந்தே மறவர்கள் (வீரர்கள்) தம் உயிர்ப்பலி கொடுத்து வந்தனர். மருவூர்ப்பாக்கத்து மறவர்களும் பட்டினப் பாக்கத்து மறவர்களும் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு, அரசன் வெல்க என வாழ்த்தித் தம் தலையைத் தாமே அரிந்து பலி கொடுத்துக் கொள்வார்களாம். தற்கொலைப் படையினர் அந்தக் காலத்திலேயே இருந்தனர் என்பது இதனால் உய்த்துணரக் கிடக்கிறது. இது போன்றதோர் உயிர்ப்பலி கலிங்கத்துப் பரணியில் சொல்லப்பட்டுள்ளது:

மறவர்கள் தலையை அடிக்கழுத்தோடு அரிந்து கொற்றவையின் கையில் கொடுப்பராம். தலை கொ ற் ற வை யை த் துதிக்குமாம். குறையுடலும் கொற்றவையைக் கும்பிட்டு நிற்குமாம். (பாடல்: கோயில் பாடியது-15)