பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. தெய்வப் பொதுவுடைமை

உலகில் பொருளியலில் பொதுவுடைமை பேசப்படுகிறது. இன்னும் எது-எதிலே பொதுவுடைமைப் பேசப்படலாம். ஆனால், தெய்வக் (சமயக்) கொள்கையில் பொதுவுடைமை பேசுவது-மேற்கொள்வது ஒரு பெரிய புரட்சியேயாகும். ஒன்றே குலம் ஒருவனே தேவன் (2104) என்று திருமூலர் சொன்னார். எல்லா ஆறுகளும் கடலில் கலப்பது போல, எல்லாச் சமயக் கொள்கைகளும் ஒரே கடவுள் கொள்கையில் சென்று முடிகின்றன வாதலின், சமயப் பூசல் வேண்டா என்று சிலர் கரடியாய்க் கத்துகின்றனர். ஆனால், இக்கொள்கையில் வெற்றி கிடைத்ததா?

உலகில் பின்பற்றப்படும் பெரிய மதங்களுள் ஒவ்வொன்றிலும் சில அல்லது பல பிரிவுகள் இருப்பது வியப்பிற்கும் வேதனைக்கும் உரியதாகும். ஒரு மதத்துக் கடவுள் திருமேனி தெருவில் ஊர்வலம் வரும்போது, மற்றொரு மதத்தினர் தம் வீட்டுத் தெருக் கதவைச் சாத்தித் தாளிட்டுக் கொள்ளும் நடைமுறை உண்மையை — செய்தியை நோக்குங்கால், இது குறித்து மேலும் கூறுவதற்கு என்ன இருக்கிறது?

இந்த அடிப்படையுடன் இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்திற்கு வருவோம். இளங்கோ அடிகளைப் பெரிய பொதுவுடைமையாளர் எனலாம். நூலை மூவேந்தர்க்கும் பொதுவான காப்பியமாக அமைத்தது போலவே, எல்லாத் தெய்வங்கட்கும் பொதுக் காப்பிய மாகவும் அமைத்துள்ளார் எனலாம். மன்னர் மரபில்