பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

340

சுந்தர சண்முகனார்


என்பது பாடல் பகுதி. பொதியத்திலிருந்து வரும் தென்றல் காற்றினும் மதுரையிலிருந்து வரும் காற்று சிறந்ததாம். பாண்டியனது நாட்டுப் பகுதியில் தனியாகச் செல்லினும் அச்சம் இல்லையாம். எவ்வளவோ சுவையான செய்தி இது!

நாகரிகம் மிக்க - அறிவியல் வளர்ச்சி பெற்றுள்ள இன்றைய இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (கி.பி. 1992) தனியாகச் செல்ல முடியாதது மட்டுமன்று; கூட்டாகச் செல்லவும் முடியவில்லையே. மக்கள் மந்தை இனித் திருந்துவது எஞ்ஞான்றோ!

மூவரும் மதுரையை நெருங்கினர். அப்போது, கோயில்களின் முரசொலி, அந்தணர் மறை ஒதும் ஒலி, மறவரின் முரசொலி, யானைகளின் பிளிற்றொலி, குதிரைகள் கனைக்கும் ஒலி, மள்ளர் கொட்டும் பறை ஒலி முதலிய ஒலிகள் கடல் ஒலிபோல் ஆர்த்து இம்மூவரையும் எதிர் கொண்டு வரவேற்பதுபோல் கேட்கப்பட்டன.

"கார்க்கடல் ஒலியின் கலிகெழு கூடல்
ஆர்ப்பு ஒலி எதிர் கொள" (13; 149, 180)

என்னும் பாடல் பகுதியில் உள்ள 'எதிர் கொள' என்பது எண்ணத்தக்கது. எதிரே ஒலிக்க என்றும் பொருள் கொள்ளலாம் எனினும், எதிரேற்றதாக வரவேற்றதாகப் பொருள் கொள்ளல் கவையுடைத்து. மதிப்பிற்கு உரிய சிலர் ஊருக்குள் புகும்போது மேளதாள முழக்கத்துடன் வரவேற்பது உண்டு. அது போன்றது. இது என்று கொள்ளலாம். இது உண்மையன்று. இது ஒரு தற்குறிப்பேற்றமே. இதற்கு இன்னொரு விதமாகவும் பொருள் கொண்டு பார்க்கின் படிப்பவர்கள் ஒத்துக்கொள்வார்களா? அதாவது - இம்மூவரும் மதுரையில் வாழப்போவதில்லை . மூவருமே இறக்கப் போகின்றனர் என்ற குறிப்பில் 'எதிர்