பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

343


"போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பதுபோல் மறித்துக் கை காட்ட" (13:189-190)

என்பது பாடல் பகுதி. இதுவும் தற்குறிப் பேற்றமே.

காற்றில் பறக்கும் கொடிகளைக் குறிப்பிட்டு, வராதே எனத் தடுப்பது போலவோ வருக என வரவேற்பது போலவோ சில இலக்கியங்களில் தற்குறிப் பேற்றம் செய்யப்பட்டுள்ளது. வில்லி பாரதத்திலிருந்து இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில் ஒன்று காண்பாம்:

கிருட்டிணனிடம் துணைவேண்ட வந்த துரியோதனனை நோக்கி, நீ வேண்டினும் கண்ணன் பாண்டவர்க்குத் தவிர, உனக்குப் படைத்துணையாக வரமாட்டான் - நீ திரும்பிப் போகலாம் என்று கைகளால் தடுப்பது போல் மதில்மேல் உள்ள துணிக்கொடிகள் அசைந்தனவாம் பாடல்:

"ஈண்டு நீ வரினும் எங்கள் எழிலுடை
எழிலி வண்ணன்
பாண்டவர் தங்கட் கல்லால் படைத் துணை
யாக மாட்டான்
மீண்டு போகென்று அந்த வியன்மதில்
குடுமி தோறும்
காண்டகு பதாகை ஆடை கைகளால்
தடுப்ப போன்ற" (உத்தியோக பருவம் - 2-6) }}

என்பது பாடல். இது வராதே எனத் தடுக்கும் பாடல். அடுத்து, வருக என வரவேற்கும் பாடல் ஒன்றைக் கம்பராமாயணம் - மிதிலைக் காட்சிப் படலத்திலிருந்து காண்பாம்: தாமரை ம ல ரி ன ள ா கி ய திருமகள், நாம் செய்த தவத்தால் சீதையாக நம்மிடம் வந்து தோன்றியுள்ளாள் என்று மிதிலை நகரம் மகிழ்ச்சியுற்று, அவளை மணக்கப் போகும் திருமாலாகிய இராமன் வந்த