பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

345


வெண்கலத்தாலும் செய்யப்பட்ட பொருட்கள், படைக்கல வகை, மாலை வகை, ஆனைக் கொம்பு, தொழில் கருவிகள், சாந்து வகைகள் முதலியவை மயங்கிக் கிடக்கும்.

பொன் கடைகளில் சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் ஆகிய நால்வகைப் பொன்கள் விற்கும்.

அறுவைக் கடைகளில் பருத்தி, பட்டு, எலிமயிர் முதலியவற்றாலான ஆடைகள் ஒவ்வொரு வகையிலும் நூற்றுக்கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

கூலக் கடைத் தெருவில் துலாக்கோலுடனும் மரக்காலுடனும் தரகர் திரிவர். மிளகு, பாக்கு முதலியவற்றின் பொதிகள் நிறைந்திருக்கும். பதினாறு வகைக் கூலங்கள் விற்கும்.

கோட்டை மதில்களின்மேல் தாமே இயங்கும் எந்திரப் பொறிப்படைக்கலங்கள் இருக்கும். அவை: வில் பொறி, குரங்குப் பொறி, கவண்கல் பொறி, காய்ச்சிய நெய்யும் செம்பு உருக்கும் உள்ள பொறிகள், கல் கூடை, தூண்டில் பொறி, கழுத்தை முருக்கும் பொறி, மூளையைக் கடிக்கும் பொறி, மதில்மேல் ஏறுவோரைக் கீழே தள்ளும் பொறி, கழுக்கோல், அம்புக்கட்டுப் பொறி, ஊசிப்பொறி, கண்ணைக் கொத்தும் சிச்சிலிப் பொறி, பன்றிப் பொறி, அடிக்கும் மூங்கில் பொறி, களிற்றுப் பொறி, பாம்புப் பொறி, கழுகுப் பொறி, புலிப் பொறி, சகடப் பொறி, தகர்ப் பொறி, முதலியவை உள்ளன. இவை எதிரிகளைத் தாமே தாக்கும்.

திங்கள் குலம்

அந்திவானத்தில் பிறைநிலா என்பவன் தோன்றி மாலையாகிய குறும்பர்களை வென்று வெண்கதிர் பரப்பி மீனரசு ஆள்கின்றானாம். எதனால் இதைச் செய்ய முடிகின்றதென்றால், இளையவராயினும் பகைவர்களை