பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

350

சுந்தர சண்முகனார்



பாண்டியன் பழி

தெருக் கூத்திலோ அல்லது மேடை நாடகத்திலோ, பாண்டியனோடு வாதிடும் கண்ணகி, "பழிக்குப் பழி கொடடா பழிகாரப் பாண்டியனே" என்று பர்டியதை இளம் பருவத்தில் கேட்டதாக ஒரு நினைவு இருக்கிறது.

ஆனால், மேலே இந்தத் தலைப்பில் பாண்டியனது சிறப்புகள் பரக்க விளக்கப்பட்டுள்ளன. 'பழியொடு படராப் பஞ்சவ வாழி' எனப் பாண்டியனது வாயில் காவலன் பாண்டியனை வாழ்த்தும்படி இளங்கோவின் எழுத்தாணி செய்திருக்கிறது.

ஆராய்ச்சியாளர் சிலர் இளங்கோவடிகளுடன் சேர்ந்து கொண்டு, பாண்டியனைப் பழியினின்றும் மீட்க எவ்வளவோ முயற்சி செய்துள்ளனர். இதற்கு ஆதரவாக,

"வல்வினை வளைத்த கோலை மன்னவன்

செல்லுயிர் கிமிர்த்துச் செங்கோ லாக்கியது"
(25,98, 99)

என்று மாற்று வேந்தனாகிய சேரன் செங்குட்டுவனே இரங்கிக் கூறியுள்ளதை முன் வைக்கினர். செங்கோல் வளைவது ஏன்? - பின் நிமிர்த்துவது ஏன்? வளைத்ததனால் தானே பின் நிமிர்த்த வேண்டியதாயிற்று. பாண்டியனைப் பழியினின்றும் காப்பாற்றுவதற்காக, 'வல்வினை வளைத்தது' என ஊழ் வினையின் மேல் பழி போடுகின்றனர். அங்ஙனமெனில் கொலைகாரனும் ஊழ் வினையால்தான் கொலை செய்தான் - அவனுக்கு இறப்பு ஒறுப்பு கொடுப்பது ஏன்?

மனைவி தன்மேல் ஊடல் கொண்டு கூடாதேகினாள். அவளது ஊடலைத் தீர்ப்பதற்காகப் பாண்டிய மன்னன் விரைவாக அவள் இருந்த மாளிகைப் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தான். அப்போது, வழியில் பொற்கொல்லன் குறுக்கிட்டு, சிலம்பு திருடிய கள்வன் அகப்பட்டுக் கொண்-