பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

351


டான் எனக் கூற, அவனைக் கொன்று சிலம்பைக் கொண்டு வருக என்று கட்டளையிட்டான் - ஆராயாமல், அவை கூடிப் பேசித் தீர்ப்பு அளிக்காமல் பாண்டியன் இவ்வாறு செய்தான் - என்பதை, அன்றைக்கும் சரி - இன்றைக்கும் சரி - ஊழ்வினைமேல் பழிபோட்டு உலக அரங்கம் ஒத்துக் கொள்ளுமா - ஏற்றுக் கொள்ளுமா? தமிழகத்தில் இவ்வளவு தாழ்ந்த மன்னன் ஒருவன் இருந்தானா என உலகம் எள்ளி நகையாடாதா? ஊடல் - கூடாமை காரணமாகத்தான் இது நிகழ்ந்ததனால்தான், 'காமத்திற்குக் கண் இல்லை' என்னும் பட்டறிவு மொழி எழுந்தது போலும்!

LITTI-ur அளவு மீறிய பழிக்கு உரியவன் என்பதற்கு அவன் உயிர் துறந்தமையே போதிய சான்றாகும். கோப்பெருந்தேவி கூடாது ஏகியதால், காமம் தொடர்பான ஊடலை நாம் தீர்க்கப் போன வழியில் பொற்கொல்லன் சொன்னதை நம்பி இப்பெரும் பழியைச் செய்து விட்டோமே எனப் பாண்டியன் ஆழமாக எண்ணி வருந்தியதால்தான் அவனது இதயத்துடிப்பு நின்றிருக்கிறது. இதை இந்தக் காலத்தில் 'ஃ ஆர்ட் அட்டாக்' (Heart Attack) என்பர்.

மன்பதை (உலகச் சமுதாயம்) பாண்டியனது பழியை எவ்வாறு பொறுத்துக் கொள்ளலாம் (மன்னிக்கலாம்) எனில், அதற்கும் இடம் உண்டு. அவன் கொடுங்கோலனாயின், ஏதோ தவறு நடந்து விட்டது எனத் தனக்குத் தானே ஆறுதல் செய்து கொண்டு, பொற்கொல்லனுக்கு இறப்பு இறுப்பு (மரண தண்டனை) கொடுத்து, பின்னர்க் கண்ணகியிடம் பொறுத்தருளக் கேட்டு, அவளுக்குத் தக்க உதவி செய்து வழக்கையே முடித்துவிட்டிருப்பான். அங்ஙனம் செய்யாமல், மற்ற மன்னர்கள் - மன்பதை அறியும்படிச் செய்தி பரவுதற்கு முன்பே உயிர்விட்டிருக்கிறான். இந்தக் குறிப்பைச் செங்குட்டுவனே கூறியுள்ளதாக இளங்கோவின் எழுத்தாணி எழுதியுள்ளது: