பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

353

சுந்தர சண்முகனார்


"மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன்
எம்மோ ரன்ன வேந்தர்க்கு, உற்ற
செம்மையின் இகந்த சொல் செவிப்புலம் படாமுன்
உயிர்பதிப் பெயர்த்தமை உறுக ஈங்கென" (25:94-97)

என்பது பாடல் பகுதி. பாண்டியன் செங்கோல் தவறிவிட்டான் என்ற செய்தி மற்றவர் செவிகட்கு எட்டாத முன்பு, பாண்டியன் இறந்து விட்டான் என்ற செய்தி முதலில் எட்டும்படிச் செய்தானாம். எனவே, பாண்டியனது பழிச் செயலைப் பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

கோப்பெருங்தேவியின் குறைபாடு

பாண்டியன் இறந்ததும் கோப்பெருந்தேவியும் உடன் உயிர் துறந்து கண்ணகி போலவே மறக்கற்பு உடையவள் என்பதை மெய்ப்பித்தாள். ஒருவரின் தாய் இறந்துபடின் மற்றவர் அவரை நோக்கி, நான் உங்கள் தாய்போல் இருந்து உதவுவேன் என்று ஆறுதல் கூறலாம். ஆனால், ஒருத்தியின் கணவன் இறந்துவிடின், நான் உன் கணவனாய் இருந்து உதவுவேன்-வருந்தாதே என்று கூறமுடியாது - என்பது நம் பண்பு. இதைத்தான்,

"கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்" (20:80)

என்னும் பாடல் பகுதி அறிவிக்கிறது.

அரசனைப் போலவே அரசியும் உயிர் துறந்தமைக்குக் காரணம், கணவன் இறந்து போனது மட்டுமன்று - அவனது பழியில் அரசிக்கும் பங்கு உண்டு. இதைப் பெரும்பாலார் கருதுவதில்லை. ஏதோ, கூடல் மகளிரின் ஆடல் பாடல்களைக் கணவன் கண்டு களித்தான் என அதனை எளிதாகக் கொள்ளாமல், அதற்கு ஒரு மறை பொருள் கற்பித்துக் கொண்டு, அவன் மேல் ஊடல் கொண்டு அவையில் அவனுடன் இல்லாமல் அந்தப்புரத்திற்குப்