பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

355


"மழைவளம் கரப்பின் வான்பேர் அச்சம்
பிழைஉயிர் எய்தின் பெரும்பேர் அச்சம்
குடிபுர வுண்டும் கொடுங்கோ லஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்பம் அல்லது தொழுதகவு இல்" (25:100-104)

என்பது பாடல் பகுதி. ஈண்டு, புற நானுற்றில் உள்ள

"மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
காவலர்ப் பழிக்கும் இக்கண்ணகல் ஞாலம்" (35)

என்னும் பாடல் பகுதியும், பெரிய புராணத்தில் உள்ள

"ஒரு மைந்தன் தன்குலத்துக்கு உள்ளான் என்பதும்

உணரான்

தருமந்தன் வழிச்செல்கை கடனென்று தன்மைந்தன்
மருமந்தன் தேராழி உறவூர்ந்தான் மனு வேந்தன்

அருமந்த அரசாட்சி அரிதோமற்று எளிதோதான்"
(திருவாரூர் - 44)

என்னும் பாடலும், திருக்குறளில் உள்ள -

"இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு" (545)

"முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்" (559)

என்னும் பாக்களும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கன.

சேரன் செங்குட்டுவன் எண்ணியதை முடிக்கும் மாமல்லன். வடபுல மன்னர்கள் தென்புல வேந்தர்களை இழித்துரைத்ததைப் பொறானாய்ச் சூள் உரைத்தான்: யான் வட புலம் சென்று வென்று கண்ணகிக்குச் சிலை எடுக்க இமயத்திலிருந்து கல் கொணரவில்லையெனில், போர்க்களத்தில் பகைவரை நடுங்கச் செய்யும் ஆற்றல் இல்லாதவனாகவும், கு டி க ளை நடுங்கச் செய்யும்