பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

சுந்தர சண்முகனார்


என்பது பாடல் பகுதி. பதுமையார் என்ற பெண்ணின் கண்கள் முருகனின் இரண்டு வேல் பகுதிபோல் இருந்தது என்னும் கருத்து சீவக சிந்தாமணி - பதுமையார் இலம்பகத் திலும் உள்ளது:

“ஒக்கிய முருகன் வைவேல் ஓரிரண்டனை கண்ணாள்’

(126)

என்பது பாடல் பகுதி. இவ்வாறாக, மனையறம் படுத்த காதையில் முருகன் இடம் பெற்றுள்ளான்.

இந்திர விழவு ஊர் எடுத்த காதை

காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரனுக்குத் திருவிழா நடைபெற்றது. அப்போது, சிவன் முதலிய கடவுளர் கோயில்களிலும் சிறப்புப் பூசனைகள் செய்யப் பெற்றனவாம்:

“பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
... ... ... ... .... ... ... ... ... ... ... ...

வேறுவேறு கடவுளர் சாறுசிறந்து ஒருபால்”

(169–173-78)

பிறவா யாக்கைப் பெரியோன். மற்றவர்ப் போல் எந்தப் பெற்றோர்க்கும் பிறக்கவில்லை.

தொண்ணுற்றாறு வகைச் சிற்றிலக்கியங்ளுள் ‘பிள்ளைத் தமிழ்’ என்பதும் ஒன்று. கடவுளரையா,