பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

363


நம் எதிரில் வரின் அவரைச் சரியான காரணம் கேட்கலாம்! ஒருவேளை அந்தக் கால மரபாயும் இருக்கலாம் இது! அதாவது:- பெண் மலையாளம் - மருமக்கள் தாயம் என்பன போன்ற அடிப்படையில் சேரராகிய இளங்கோ பெண்மைக்கு முதலிடம் தந்திருப்பாரோ?

அந்தி மாலைச் சிறப்புச் செய்காதை

இல்(மனை) வளர் முல்லை

மலர் பரப்பிய படுக்கை,

“இல்வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த
பல்பூஞ் சேக்கைப் பள்ளி”
(4; 27, 28)

என்று கூறப்பட்டுள்ளது. புறஞ்சேரி இறுத்த காதையிலும், மாதவி (குருக்கத்தி), மல்லிகை, முல்லை ஆகிய மலர்களின் மாலை என்னும் பொருளில்,

“மாதவி மல்லிகை மனைவளர் முல்லைப்
போதுவிரி தொடையல்”
(13. 120, 121)

என இந்தக் கருத்து இடம் பெற்றுள்ளது.

கற்புடைய மகளிர் இல்லத்தில் (மனையில்) முல்லை வளர்ப்பார்களாம். இல்வளர் முல்லை, மனைவளர் முல்லை என்பன இதைத்தான் அறிவிக்கின்றன. இந்தக் கருத்து, குறுந்தொகை நூலில் .

“மனை எல்லறு மெளவல் நாறும்
பல்லிருங் கூந்தல்”
(மெளவல் - முல்லை - 19:4,5)

எனவும், நற்றிணையில்

“மனைகடு மெளவலொடு ஊழ் முகை யவிழ்” (115:6)

எனவும், அகநானுாற்றில்

“மனைய மெளவல் மாச்சினை காட்டி” (23:12)