பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

691


நாடு காண் காதை

உழவர்கள் உழைத்து விளைவிப்பதால் தான் இரப்பவரின் சுற்றமும் புரக்கும் அரசரின் கொற்றமும் காக்கப்படுகின்றன. காவிரியின் வளத்தால் உழவு செய்ய முடிகிறதாதலின், உழவர்கள் 'காவிரிப் புதல்வர்' எனச் சிறப்பிக்கப்பெற் றுள்ளனர்,

"பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்
இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்

உழவிடை விளைப்போர்" (10; 148 - 150)

என்பது பாடல் பகுதி. காவிரி மக்களாகிய தன் குழந்தைகளைத் தாய்போல் காக்கிறது என்னும் இந்தக் கருத்து வேறு தலைப்பில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

காடு காண் காதை

கண்ணின் கட்டளை

திருவரங்கத்தையும் திருவேங்கடமலையையும் காட்டுக என்று தன் கண் கட்டளையிட்டதால் மாங்காட்டு மறையவன் புறப்பட்டு வந்தானாம்.

"திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும் (11:40)
செங்கண் நெடியோன் கின்ற வண்ணமும்
என்கண் காட்டென்று என்னுளங் கவற்ற

வந்தேன் குடமலை மாங்காட் டுள்ளேன்" (11:51-53)

என்பது பாடல் பகுதி. கண் காட்டும்படி வற்புறுத்தியதாகக் கூறுவது ஒரு சுவையாகும். இத்தகைய ஒரு கற்பனை 'தெய்விகத் திருமணம்' என்னும் புதினத்தில் (நாவலில்) உள்ளது. வருமாறு:

"ஆனால் அந்த இளைஞரால் கண்களுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. அவளைப் பார்க்கவேண்டும் என்று