பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

373


மன்னர்களின் ஒற்றர்கள் யாவரும் நம் ஊரில் இருப்பர்; எனவே, நம் ஊரில் பறையறைந்து தெரிவிப்பின் போதும் - இதைக் கேட்கும் ஒற்றர்கள் அவர்கள் ஊருக்குச் செய்தி அனுப்பி விடுவர் - என்று கூறியது, ஓர் அரசியல் சூழ்ச்சிச் சுவையாகும்.

தோள் துணை இழப்பு

வஞ்சி மாநகரில் அரசன் ஆணையுடன் பின்வருமாறு பறையறைந்து அறிவிக்கப்பட்டது:

வடபுல மன்னர்களே! முன்னரே சேரன் இமயம் கொண்டதால் நீவிர் திறை கட்ட வேண்டியவர் ஆவீர். இப்போது செங்குட்டுவன் கண்ணகிக்குக் கல் கொணர வடபுலம் வருகிறான். வழியில் வரும்போது திறை கட்டி விடுங்கள். இல்லையேல், நீங்கள் தோள் துணையாகிய மனைவியரை இழந்து துறவு கொள்ளுங்கள் - என்பது பறையறிவிப்பு.

“தோள் துணை துறக்கும் துறவொடு வாழுமின்”

(25:190)

என்னும் பகுதி சுவைக்கத்தக்கது.

“இடுதிறை கொடுவந்து எதிரீ ராயின்
கடல் கடம் பெறிந்த கடும்போர் வார்த்தையும்
விடர்ச்சிலை பொறித்த வியன்பெரு வார்த்தையும்
கேட்டு வாழுமின் கேளீ ராயின்
தோள்துணை துறக்கும் துறவொடு வாழுமின்”

(25:186–195)

இது பாடல் பகுதி. சேரர்கள் கடலில் இருந்த கடம்பு எறிந்து வென்றவர்கள் - இமய மலையில் வில் பொறித்து வென்றவர்கள். எனவே, நீங்கள் சேரர்க்கு அஞ்சவில்லை எனில், கடலைக் கடந்து அக்கரையிலுள்ள இடத்திற்குச் சென்றும், இமயத்தைத் தாண்டி அதற்கு வடக்கே உள்ள