பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

374

சுந்தர சண்முகனார்


இடத்தை அடைந்தும் வாழ்வீராக என்ற நயம் இந்த பகுதியில் அமைந்து சுவை பயக்கிறது.

தோள் துணை என்பது மனைவியின் துணையைக் குறிக்கிறது. ஈண்டு, மனைவிக்கு ‘வாழ்க்கைத் துணை’ என்னும் பட்டத்தை வள்ளுவர் நல்கியிருப்பது ஒப்பு நோக்குதற்கு உரியது.

கால் கோள் காதை

மலை முதுகு நெளிதல்

செங்குட்டுவன் பெரும்படையுடன் நீலமலை (நீலகிரி) வழியாகச் சென்றான். படைகளின் மிகுதியால் மலையின் முதுகு நெளிந்ததாம். ‘மலைமுது குநெளிய’ (26.82) என்பது பாடல் பகுதி. இஃதோர் இலக்கியச் சுவை. உயிருள்ள பொருள்களின் - முதுகு உள்ள உயிரிகளின் முதுகுதான் நெளியும். இந்த நெளிவு அஃறிணைப் பொருளாகிய மலைக்கும் கூறப்பட்டுள்ளது.

“உரிய பொருளின்றி ஒப்புடைப் பொருள்மேல்
தரும்வினை புணர்ப்பது சமாதி யாகும்”
(25)

என்னும் தண்டியலங்கார நூற்பாவின்படி இது சமாதி அணி எனப்படும். சமாதி அணியை, ‘ஒப்புவினை புணர்ப்பணி’ என்று தமிழில் குறிப்பிடலாம்.

பகைவரின் மாறு கோலம்

செங்குட்டுவனின் வடநாட்டுப் போரில் சிறைப்பட்ட கனக விசயர் முதலியோரைத் தவிர, மற்ற பகைவர்கள் பலவித மாறுகோலம் கொண்டு தப்பி ஓடினராம். அதாவது: சடைமுடி தாங்கியும், காவி உடுத்தும், திருநீறு பூசியும், மணையும் மயில் தோகையும் (சமணத் துறவியர்போல்) ஏந்தியும், பாடும் பாணர் போலவும், பல இயங்களைக் கூத்தர் போலத் தோளில் சுமந்தும், வாளை விட்டுத்