பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30. கண்ணகி பாண்டியன் மகளா?

வாழ்த்துக் காதை

வஞ்சி நகர மகளிர் கண்ணகியைப் பாண்டியன் மகள் என்று கூறிப் பாடினர். பாடல்:

"வஞ்சியீர் வஞ்சி இடையீர் மறவேலான்
பஞ்சடி ஆயத்தீர் எல்லீரும் வம்மெல்லாம்;
கொங்கையால் கூடல் பதிசிதைத்துக் கோவேந்தைச்
செஞ்சிலம்பால் வென்றாளைப் பாடுதும் வம்மெல்லாம்;
தென்னவன் தன் மகளைப் பாடுதும் வம்மெல்லாம்;
செங்கோல் வளைய உயிர் வாழார் பாண்டியர் என்று
எங்கோ முறைகா இயம்ப இந்நாடடைந்த
பைங்தொடிப் பாவையைப் பாடுதும் வம்மெல்லாம்;

பாண்டியன் தன்மகளைப் பாடுதும் வம்மெல்லாம்"
(29:11)

கொங்கையால் மதுரையை எரித்தவளும் பாண்டியன் மகளும், செங்கோல் தவறின் பாண்டியர் உயிர் வாழார் என்று எம்சேரமன்னன் புகழ இச்சேர நாடு அடைந்தவளும் ஆகிய கண்ணகியை நாம் எல்லேமும் பாடுவோம் வருக என்று வஞ்சி மகளிர் பாடினர் - என்பது கருத்து. மேலும் வஞ்சி மகளிர் பாடுவர்:

சேரன் கண்ணகிக்குக் கோயில் எடுத்துப் புத்துயிர் தந்து புதிய தெய்வப் பிறவியாக ஆக்கியதால், கண்ணகி சேரன் மகள் என்று வஞ்சி மகளிராகிய நாம் சொன்னோம். ஆனால், தெய்வமாகி விட்ட கண்ணகி ஒலி வடிவுடன் யான் பாண்டியன் மகள்’ என்றாள். நாம் சேரனை