பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

393

சுந்தர சண்முகனார்


வாழ்த்துவோமாக! தெய்வ மகளாகிய கண்ணகி பாண்டியனை வாழ்த்துவாளாக! இதன் பாடல்:

"வானவன் எங்கோ மகள் என்றாம்; வைணயயார்
கோனவன்தான் பெற்ற கொடியென்றாள் - வானவனை
வாழ்த்துவோம் காமாக வையையார் கோமானை
வாழ்த்துவாள் தேவ மகள்" (29:12)

இது பாடல். புகாரிலே இருந்த மாநாய்கன் என்னும் வணிகனின் மகளாகிய கண்ணகியைப் பாண்டியன் மகள் என்று கூறியிருப்பதில் உள்ள சிக்கலை அவிழ்க்க வேண்டுமே! இது என்ன வம்பாய் (புதிதாய்) இருக்கிறது! இதற்குப் பழைய கதையின் துணை தேவைப்படுகிறது.

கண்ணகி காளியா?

காளிதான் கண்ணகியாக வந்தாள் என்பது ஒரு பழங்கதை. இது குறித்து இளமையிலேயே யான் எண்ணிப் பார்த்ததுண்டு. 1949 மே திங்கள் 11-ஆம் நாள். திருச்சிராப்பள்ளித் திருவள்ளுவர் கழகத்தின் சார்பில் பழக்கடைத் தெருவிலுள்ள சத்திரத்தில் சிலப்பதிகாரம் தொடர்பாக "எது கற்பு?" என்னும் தலைப்பில் இரண்டே முக்கால் மணிநேரம் யான் சொற்பொழிவாற்றினேன். அதே ஆண்டு அதே திங்கள் 14-ஆம் நாள், கடலூர் வண்டிப் ப்ாளையம் முருகன் கோயிலில் கண்ணகி காளியா? என்னும் தலைப்பில் இரண்டே கால் மணிநேரம் சொற்பொழிவாற்றினேன். சிலம்பு பற்றி ஒருரில் தெரிவித்த கருத்துகளே பெரும்பாலும் வேறு ஊரிலும் இடம் பெற்றன.

கண்ணகி காளியா? என்னும் தலைப்பில் பேசிய யான், கண்ணகி காளியல்லள் - எல்லாரையும் போன்ற மக்களினப் பெண்ணே - காளி வந்து கண்ணகியாகப் பிறக்கவில்லை . என்று பேசி முடித்தேன். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பெரியார் ஒருவர் அவரது.தலைம்ை முடிப்புரையில்,